T20 தொடராக மாறும் சாம்பியன்ஸ் டிராபி?.. மீண்டும் வாகைசூடுமா இந்தியா?.. வெளியான முக்கிய அப்டேட்..!!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 19 முதல் மார்ச் 9 வரை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை T20 வடிவத்தில் நடத்த ஒளிபரப்பாளர்கள் ICC நிர்வாகத்திடம் கேட்டு கொண்டதாகத் தகவல் வெளிவந்துள்ளது.
நிறைய அணிகள் டி20 போட்டிகளையே விரும்புவதாலும், ஒரு நாள் விட டி20 போட்டிகளை ரசிகர்களிடம் எளிதில் விளம்பரப்படுத்த முடியும் என்ற காரணங்களாலும் இம்முடிவை ICC நிர்வாகம் பரிசிலித்து வருகிறது. அதன்படி விரைவில் இத்தொடருக்கான அட்டவணை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




