உலகம் எங்கும் சமூக வலைதளமான whatsapp முதலிடத்திலும் அதனை தொடர்ந்து டெலிகிராம் தான் இரண்டாம் இடத்திலும் மக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கிறது, அப்படி இருக்கும் பட்சத்தில் டெலிகிராம் மூலம் பணம் மோசடி நடப்பதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்து கொண்டிருக்கும் பட்சத்தில் டெலகிராமை முடக்குவதாக செய்தி வெளிவந்துள்ளது..
இந்தியாவில் whatsapp க்கு பிறகு டெலிகிராம் தான் பயன்பாட்டில் உள்ளது, இந்த செயலின் மூலமாக பணம் பறித்து வருவதாக பலரும் கூறுகின்றனர், மேலும் அந்த telegram செயலியை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக மத்திய அரசு செய்தியை வெளியிட்டுள்ளது, டெலிகிராமில் பண மோசடி மற்றும் வேலை தருவதாக கூறி தங்களின் சுய விபரங்களை திருடுவது போன்ற மோசடிகள் நடக்கின்றதால் மக்கள் பலரும் அச்சத்திலும் பயத்திலும் இருக்கிறார்கள் என்று தெரிய வருகிறது, இதனை தொடர்ந்து அதிகாரிகள் கொடுக்கும் தகவலின் அடிப்படையில் telegram செயலி இயங்குவதும் முடக்குவதும் விரைவில் தெரியப்படும் என்று மத்திய அரசு தெளிவாக கூறியுள்ளது, எவரேனும் டெலிகிராம் செயலியின் மூலம் பணம் அல்லது மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் அவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசு கூறியுள்ளது..!!