இரத்தம் சுத்தமின்மையால் உடல் அசதி, காய்ச்சல், வயிற்றுப் பொருமல், சுவாசக்கோளாறுகள் உருவாகலாம்.
இரத்தத்தை சுத்தப்படுத்த – இஞ்சி சாறுடன் தேன் கலந்து சாப்பிடலாம்.
இரத்தம் விருத்தியாக – செம்பருத்தி பூவை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அடைப்பு நீங்கும்.
புதிய இரத்தம் உண்டாக – பீட்ரூட் கிழங்கு சாப்பிட்டு வரவும்.
இரத்தம் சுத்தமடைய – தினமும் திராட்சை பழத்தை சாப்பிட்டு வரலாம்.
மலத்துடன் இரத்தம் வருவது நிற்க – மாதுளம் பூ இடித்து தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.
இரத்தம் உரைதல் குணமாக – தொடர்ந்து நெல்லிக்காய் சாப்பிட்டு வரலாம்.
இரத்தம் விருத்தியாக – தினமும் நாவல் பழத்தை சாப்பிட்டு வரலாம்.
இரத்தம் விருத்தியாக – முருங்கைக்கீரையை துவரம் பருப்புடன் சமைத்து ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டு கிளறி நெய் சேர்த்து 41 நாட்கள் சாப்பிட்டு வரலாம்.