TIPS TIPS: திருமணத்துக்கு முன்னர் உறவு..!! அதனால் ஏற்படும் சிக்கல்..!!

திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக்கொள்வது சரியா? தவறா? என்ற வாதம் தற்போது வரை நடந்து கொண்டு தான் இருக்கிறது. ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தின் படி வாழ்க்கை நடத்தத் தொடங்கியுள்ள இளம் பருவத்தினர் பலரும் திருமணத்துக்கு முன்னர் செக்ஸ் வைத்துக்கொள்வது ஒன்றும் தேசிய குற்றம் அல்ல என நினைக்கின்றனர்.

‘பொத்தி பொத்தி ஒரு விஷயத்தை மூடி மறைத்து செய்யும்போது’ அதன் மீது ஒரு தனி ஈர்ப்பும், அதில் அப்படி என்னதான் இருக்கிறது? என்று அறிந்து கொள்ளும் ஆர்வமும் வந்து விடுகிறது. அதேபோல தான் செக்ஸ் பற்றி வெளிப்படையாக யாரும் பேசாத காரணத்தால் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் மத்தியில் அதனை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்து விடுகிறது. இதற்கு ஹார்மோன்கள், சினிமாக்கள், இன்டர்நெட் என பலரும் சேர்ந்து உதவுவதால் திருமணத்துக்கு முன்பே செக்ஸ்(Sex) வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இளம் பருவத்தினர் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

சிலர் இந்த ஆர்வத்தை வெறும் தியரியாக நினைத்து விட்டுவிடுகின்றனர். பலர் பிராக்டிக்கலாக செய்து பார்த்து பின் விளைவுகளையும் சேர்த்து ஏற்றுக்கொள்கின்றனர். இளம் பருவத்தினர் மத்தியில் திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது அதிகரித்து வருகின்ற நிலையில் இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மற்ற உயிரினங்கள் அனைத்தும் இனப்பெருக்கத்திற்காக மட்டுமே தங்கள் இணையுடன் கூடுகின்றன. ஆனால் மனிதன் மட்டும் தான் தனது மகிழ்ச்சிக்காக அடிக்கடி தனது இணையுடன் கூடுகிறான். இதுதவிர குடும்பம், குழந்தைகள் போன்றவற்றிற்காகவும் நீண்டநாள் ஒரு உறவில் நிலைத்து நிற்கவும் தனது துணையை இல்வாழ்க்கையுடன் ஒன்ற வைப்பதற்காகவும் செக்ஸ் என்பதை ஒரு ஆயுதமாக பெண்கள் காலம்காலமாக பயன்படுத்தி வருகின்றனர்.

ஆண்களின் மனது அலைபாயும் மனது என்பார்கள் திருமணமாகி தோளுக்கு மேல் பிள்ளைகள் இருந்தாலும் பெண்களை பார்ப்பது, அவர்களுடன் பேசுவது போன்றவற்றை ஆண்கள் தொடர்ந்து செய்வார்கள். இதற்கு அவர்கள் உடலில் இருக்கும் ஹார்மோன்களும் ஒரு காரணமாக உள்ளது. அது வெறும் பார்வையுடன் அல்லது பேசுவதுடன் நின்றுவிட்டால் தொல்லைகள் இல்லை. அதுவே எல்லை மீறிய தொடர்பாக உருமாறும்போது இந்த சமூகத்தின் கட்டமைப்பு, குடும்ப கவுரவம், குழந்தைகளின் வாழ்க்கை என எல்லாமே பாழாகிவிடும்.

நமது குழந்தைகளுக்கு நீங்கள் தான் ரோல்மாடல் என சொல்லாலும், செயலாலும் தெரிவியுங்கள். தமது பிள்ளைகளுக்கு ஒரு மோசமான முன்னுதாரணமாக இருக்க எந்தவொரு தந்தையும் விரும்ப மாட்டார்கள்.

திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொள்வது ஆண்-பெண் இருவருக்குமே நல்லது கிடையாது. குறிப்பாக இதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். கடவுள் பெண்களுக்குத் தான் குழந்தை பெற்றெடுக்கும் வரத்தை கொடுத்திருக்கிறார். இதனால் திருமணத்துக்கு முன்பாக செக்ஸ் வைத்துக்கொண்டு ஒருவேளை நீங்கள் கருவுற்றால் உங்களுக்கு மட்டுமல்ல, உங்கள் குழந்தைக்கும் இந்த சமுதாயம் உரிய மதிப்பளிக்காது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் திருமணத்துக்கு முன் கருவுற்று வீட்டுக்குத் தெரியாமல் அல்லது வேறு சில காரணங்களால் அபார்ஷன் செய்ய நேரும்போது, பிற்காலத்தில் உங்களுக்கு தேவைப்படும் நேரத்தில் நீங்கள் குழந்தை பெற்றுக்கொள்ள நினைக்கும்போது அது தள்ளிப்போகலாம். சில நேரங்களில் அபார்ஷன் செய்வது உங்கள் உயிருக்கே கூட ஆபத்தாக முடியலாம். அதனால் முடிந்தவரை இதுபோல விஷயங்களில் ஆர்வம்
காட்டாதீர்கள்.

உங்கள் காதலர் வற்புறுத்துகிறார் என்றோ அல்லது நாம தான் திருமணம் செய்துகொள்ள போகிறோமே என்ற அசட்டு தைரியத்திலோ, திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்ளாதீர்கள். இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று உங்களுடன் செக்ஸ் வைத்துக்கொள்ளும் போது அதுவரை உங்கள் மேல் இருந்த ஈர்ப்பு உங்கள் காதலருக்கு குறையக்கூடும். இரண்டாவது இப்போதெல்லாம் மணமேடை வந்து திருமணம் நின்றுபோவது சகஜமாகி வருகிறது. அடுத்த நிமிடம் என்ன நடக்கும் என தெரியாத நிச்சயமற்ற வாழ்க்கை இது. அதனால் எந்த காரணம் கொண்டும் இதுபோன்ற விஷயங்களுக்கு சம்மதிக்க வேண்டாம்.

ஒருவேளை எதிர்பாராதவிதமாக செக்ஸ் வைத்துக்கொள்ளும் சூழ்நிலை அமைந்து விட்டால் என்ன செய்வது? என்று கேட்கிறீர்களா அப்படி ஒரு சூழ்நிலை வரும்போது தகுந்த பாதுகாப்பு விஷயங்களை மேற்கொள்ளுங்கள். தெரிந்த மருத்துவரிடம் சொல்லி கரு உருவாகாமல் வராமல் தடுக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை உங்கள் காதலன் காண்டம் பயன்படுத்தி இருந்தாலும் கூட நீங்களும் தகுந்த பாதுகாப்பு விஷயங்களை எடுத்துக்கொள்வது உங்களுக்கு நல்லதாக அமையும். இருப்பினும் கூடுமானவரையில் திருமணத்துக்கு முன் செக்ஸ் வைத்துக் கொள்வதை தவிர்ப்பது உங்கள் காதல் மற்றும் உடலுக்கு நல்லது.

Read Previous

சுவாசக் குறைப்பாடுகளை ஒரு கை பார்க்கும் கற்பூரவல்லி தேநீர்..!!

Read Next

ஆபாச வீடியோ காட்டி பெண்ணுக்கு பாலியல் தொல்லை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular