TIPS TIPS.. தொந்தரவு தரும் கொட்டாவியை போக்க இயற்கை மருத்துவம்..!!

சிலருக்கு காலையில் எழுந்ததிலிருந்து கொட்டாவியாக வந்து கொண்டே இருக்கும். இதனால் பொது இடங்களிலும், வேலை பார்க்கும் இடங்களும் தர்ம சங்கடத்திற்கு உள்ளாவார்கள்.

இது போன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீர்வளிக்கும் சில எளிய டிப்ஸ்கள் உங்களுக்காக..!

கொட்டாவி வரும் நேரத்தில் குளிர்ச்சியான தண்ணீர், கோல்ட் காபி, தயிர் போன்றவற்றை அருந்தினால், உடல் சூட்டை தணித்து கொட்டாவி வருவதை தடுக்கும்.

குறைவான ஆக்சிஜன் இருந்தால் கொட்டாவி அடிக்கடி வரும். எனவே கொட்டாவி வரும் நேரங்களில், மூன்று முறை ஆழ்ந்து மூச்சை இழுங்கள். இதனால் உடலுக்கு தேவையான போதுமான ஆக்சிஜன் கிடைக்கும்.

சிரிப்பிற்கு கொட்டாவியை தடுக்கும் பண்பு உண்டு. எனவே அடிக்கடி கொட்டாவி வரும் நேரங்களில், நகைச்சுவை வீடியோக்கள்,ஜோக்குகள் போன்றவற்றை பார்க்கலாம்.

குறிப்பிட்ட நேர இடைவேளைகளில், சில நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் சோம்பலை தடுத்து, கொட்டாவி வருவதை நிறுத்தும்.

கொட்டாவி வரும் நேரங்களில் “ஆடம் ஆப்பிள்” எனப்படும் கழுத்தில் உள்ள ஒரு புள்ளியை மெதுவாக அழுத்துங்கள். இது கொட்டாவியை தடுக்கும்.

உங்கள் நாற்காலியில் சாய்ந்து உட்கார்ந்தால், கொட்டாவி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே நேராக நிமிர்ந்து உட்காருங்கள்.

ஆழ்ந்த உறக்கம் கண்டிப்பாக நாள் முழுவதும் உங்களை உற்சாகமாக வைத்திருக்கும். இதனால் நீங்கள் கொட்டாவி விடுவதும் தடுக்கப்படும்.

Read Previous

பாத வெடிப்பை வெறும் 7 நாட்களில் சரி செய்யலாம்..!! இதோ அற்புதமான வழி..!!

Read Next

படித்ததில் பிடித்தது: இது தான் பிசினஸ் யுக்தி போல..!! பிடித்தால் பகிருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular