Uncategorized – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in Wed, 06 May 2026 08:13:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=7.0 https://tamilyugam.in/wp-content/uploads/2022/09/cropped-site-icon-tamilyugam-news-32x32.png Uncategorized – Tamil News, Online Tamil News, தமிழ் செய்திகள் – Tamilyugam https://tamilyugam.in 32 32 வயிற்றில் எரிச்சல், வலி வருதா..?? அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்..!! https://tamilyugam.in/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/ https://tamilyugam.in/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/#respond Wed, 06 May 2026 08:13:48 +0000 https://tamilyugam.in/?p=237342 வயிற்றில் எரிச்சல், வலி வருதா? அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், பலருக்கும் பொதுவாக ஏற்படும் ஒரு உடல்நலப் பிரச்சனை தான் காஸ்ட்ரிக் பிரச்சனை. உணவு பழக்கவழக்கங்களில் ஏற்பட்ட மாற்றங்கள், வேலைப்பழுத்தம், மன அழுத்தம் போன்ற காரணங்களால் இந்த பிரச்சனை அதிகரித்து வருகிறது.

ஆரம்பத்தில் சாதாரண எரிச்சல் போல தோன்றினாலும், அதை கவனிக்காமல் விட்டால் அது பெரிய நோய்களுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.

காஸ்ட்ரிக் பிரச்சனை என்பது வயிற்றில் அமில சுரப்பு அதிகரிப்பால் ஏற்படும் ஒரு நிலையாகும். இந்த அமிலம் உணவை செரிமானிக்க உதவுவதற்காக இயல்பாக உற்பத்தியாகும். ஆனால் அது அதிகமாக சுரந்தால் வயிற்றின் உள் சுவரை பாதித்து எரிச்சல், வலி போன்ற பிரச்சனைகளை உருவாக்குகிறது.

குறிப்பாக மார்பு எரிச்சல், வயிற்று வலி, அடிக்கடி டக்கார் விடுதல், வாந்தி உணர்வு, உணவு சாப்பிட்ட பிறகு கனமாக இருப்பது போன்ற அறிகுறிகள் இதன் மூலம் காணப்படுகின்றன.

இந்த பிரச்சனை உருவாகும் முக்கிய காரணங்களில் ஒன்றாக ஒழுங்கற்ற உணவு பழக்கம் குறிப்பிடப்படுகிறது. நேரத்திற்கு உணவு சாப்பிடாமல் இருப்பது, அதிக காரம் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவுகளை உட்கொள்வது, பாஸ்ட் ஃபுட் அதிகமாக சாப்பிடுவது போன்றவை வயிற்றில் அமிலத்தை அதிகரிக்கிறது. அதோடு, மன அழுத்தம், புகைபிடித்தல், மது அருந்துதல், அதிகமாக காபி அல்லது டீ குடிப்பது போன்ற பழக்கவழக்கங்களும் காஸ்ட்ரிக் பிரச்சனையை தீவிரப்படுத்துகின்றன.

இந்த பிரச்சனையை தவிர்க்க, நம் தினசரி வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை கொண்டு வருவது மிகவும் அவசியம். முதலில், உணவை நேரத்திற்கு சாப்பிடும் பழக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும். அதிகமாக தண்ணீர் குடிப்பது, காய்கறி மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகா, தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது நல்லது. ஒரே நேரத்தில் அதிகமாக சாப்பிடாமல், சிறு அளவில் பலமுறை சாப்பிடும் பழக்கமும் வயிற்று நலத்தை பாதுகாக்க உதவும்.

அதே நேரத்தில், அதிக கார உணவுகள், எண்ணெய் பொரியல், காபி, குளிர்பானங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். இவை அனைத்தும் வயிற்றில் அமில சுரப்பை அதிகரித்து பிரச்சனையை மோசமாக்கும்.

காஸ்ட்ரிக் பிரச்சனை நீண்ட காலம் தொடர்ந்தால், அது வயிற்று புண் (Ulcer) போன்ற தீவிர நோய்களாக மாறக்கூடும். ஆகவே, அடிக்கடி வயிற்று வலி, எடை குறைவு, இரத்த வாந்தி அல்லது கருப்பு மலம்வருதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது மிகவும் முக்கியம்.
மொத்தத்தில், காஸ்ட்ரிக் பிரச்சனை சாதாரணமான ஒன்றாக தோன்றினாலும், அதை சரியாக கவனித்தால் எளிதில் கட்டுப்படுத்தலாம்.

ஆரோக்கியமான உணவு முறையும், ஒழுங்கான வாழ்க்கை முறையும் இதைத் தடுக்கும் முக்கிய வழிகளாகும். நம் உடல்நலத்தை பாதுகாப்பது நம் கையில் தான் என்பதை மறக்காமல், சரியான பழக்கங்களை இன்று தொடங்குவோம்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%b5%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/feed/ 0
இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை..!! https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5/ https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5/#respond Sat, 02 May 2026 04:58:10 +0000 https://tamilyugam.in/?p=237062 இது கதையா, இல்லை உண்மையாவென்று தெரியவில்லை.

கிழக்கு ஆசிய நாடுகளில், ஒருவிதமான பூச்சியை பிடித்து, ஒரு கண்ணாடி பெட்டியினுள் அடைத்து மூடிவிடுவார்கள். அந்த கண்ணாடி யில் சிறிய துவாரங்கள், சுவாசிப்பதற்காக இருக்கும்.

அந்த பூச்சியானது, மேலே நோக்கிப் பறந்து, வெளியே போக முயற்சி பண்ணும். மேலே உள்ள கண்ணாடியில் இடித்து, “ஆ! அம்மா !! வலிக்கு தே, இனி மேலே நோக்கிப் போகும் போது பார்த்து போகனும் ” என்று தீர்மானித்துக் கொள்ளும். அதேபோல, இடது புறம் உள்ள கண்ணாடி வழியாக, வெளியே செல்ல முயற்சிக்கும். அதே அடி. அதே வலி. அதே தீர்மானம். இப்படியாக எல்லா திசைகளிலும், பறந்து, வெளியே செல்ல முயன்று, இறுதியாக ஒரு முடிவுக்கு வந்துவிடும்.

சரி, இதுதான் நமது விதி. இந்த கூண்டுக்குள் தான் இனி நம் வாழ்நாளை கழிக்க வேண்டும் போல இருக்கு. இனியும் முயற்சி செய்து பலன் இல்லை. ஆக, இந்த கூண்டுக்குள், நாம் எப்படி சந்தோஷமாக, நிம்மதி யாக இருக்கலாம் என்று எண்ணத் தொடங்கிவிடும். அதோடு கூண்டை தாண்டி வெளியே செல்லும் முயற்சியை கைவிட்டு விடும். இப்போது மேலே நோக்கி பறக்கும். சரியாக ஒரு இன்ச் தூரத்தில், பிரேக் போட்டது போல் நின்று விடும். இந்த தடவை, கண்ணாடியில் இடி இல்லை அதனால் வலி இல்லை. அதே போல், இடது பக்கம் பறக்கும். ஒரு இன்ச் தூரத்தில் நின்று விடும். அனைத்து பக்கங்களிலும் பறக்கும். எந்தக் கண்ணாடியிலும் இடிக்காமல் பறக்கும். அந்த திறமையை, வாழ்க்கை அளித்த பாடம் என்று பெருமையாக எண்ணிக் கொள்ளும்.

இப்படி, அந்த பூச்சி, எந்த பக்கத்திலும் இடிக்காமல் பறப்பதை பார்த்த வுடன், அவர்கள், மேலே உள்ள கண்ணாடி, மற்றும் பக்கங்களில் உள்ள கண்ணாடியை எடுத்து விடுவார்கள். இப்போது, மேலே கண்ணாடி இல்லை. பக்கங்களில் கண்ணாடி இல்லை. ஆனால், அந்த பூச்சி, ஆனந்தமாக, இன்னும் அந்த ஒரு இன்ச் தூரத்தில் பிரேக் போட்டு நின்று, இல்லாத கண்ணாடிகளில் இடிக்காமல், அந்த வேலி இல்லாத பெட்டிக் குள், தன் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு இருக்கிறது.

அந்த பூச்சி மட்டும், பழைய வலியை மறந்து, கொஞ்சம் புது முயற்சி செய்து இருந்தால்… அந்த ஒரு இன்ச் தூரத்தை கடந்து இருக்கும்.ஒரு இன்ச் தூரத்தைக் கடந்து இருந்தால், இந்த உலகத்தையே சுற்றி வந்து இருக்கும்.

நம்மில் பலர், இந்த பூச்சியை போன்று வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.
முயற்சி செய்வதை கைவிட்டு விடுவது உண்டு.
இல்லாத வேலியினுல், எதிலும் இடிக்காமல், வீணாக எந்த புது முயற்சி யிலும் ஈடுபடமால், இது தான் விதி என்று பலர் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம்.

நாம், அந்த ஒரு இன்ச் தூரத்தை தாண்டி விட்டால்…வாழ்க்கையில் நாம் சாதனை புரிய …வானமே எல்லை….

முயற்சியுடையார் இகழ்ச்சியடையார், முயற்சி திருவினையாக்கும் முயற்சியின்மை இன்மை புகுத்திவிடும்.. வாழ்வில் வெற்றி பெற நமக்கு அமைத்துக் கொண்ட வேலிகளைத்தாண்டி முயற்சிகள் செய்வோம்.. வாழ்வில் வெற்றி பெறுவோம்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a4%e0%af%81-%e0%ae%95%e0%ae%a4%e0%af%88%e0%ae%af%e0%ae%be-%e0%ae%87%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%b5/feed/ 0
இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்..!! https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81/ https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81/#respond Sat, 02 May 2026 04:26:14 +0000 https://tamilyugam.in/?p=237066 உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமை என்னவென்று பலருக்கு இன்னமும் தெரியவில்லை என்று சொல்லலாம். உலர்ந்த திராட்சை என்றால் சர்க்கரை பொங்கலுக்கும், பாயாசத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்று பலர் நினைத்து கொண்டிருக்கின்றனர். இதன் பயனை அறிந்தால் வெறும் வாயிலேயே இதை மென்று சாப்பிடுவார்கள்…

உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். எலும்புகளோடு பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது.

வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும்.

குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்டு கால்கள் வளையாது வளரும்.

தற்போது உள்ள பருவ பெண்களுக்கு முடி உதிரும் பிரச்னை அதிகமாக உள்ளது. பியூட்டி பார்லர் சென்று ஆலோசனை கேட்பதை விட, தினமும் 10 உலர் திராட்சையை சாப்பிட்டாலே போதும் முடி கொட்டும் பிரச்னையிலிருந்து விடுபடலாம். தினமும் சாப்பிட மண்டையோடு பலப்படும்…!

]]>
https://tamilyugam.in/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%af%e0%ae%a9%e0%af%88-%e0%ae%85%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81/feed/ 0
மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ..!! https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82/#respond Sat, 31 Jan 2026 06:53:42 +0000 https://tamilyugam.in/?p=231717  

மலர் என்றாலே மணம்தான்… அதிலும் ஒரு சில பூக்கள் அதீத மணம் கொண்டவையாக இருக்கும். அதில் குறிப்பிடத்தகுந்தது மகிழம்பூ. அழகும், நறுமணமும் கொண்ட இந்த மகிழம்பூ சூடுவதற்கானது மட்டுமல்ல; மருத்துவ குணங்களும் நிறைந்தது என்கிறார் சித்த மருத்துவர் நந்தினி சுப்ரமணியம். அதன் மருத்துவப் பயன்களைத் தொடர்ந்து விவரிக்கிறார்.
அடர்த்தியான கரும்பச்சை இலைகளைக் கொண்டது மகிழ மரம். இதன் தாவரவியல் பெயர் Mimusops elengi(Bakula). இதன் பூ சந்தன நிறத்தில் இருக்கும். காய்ந்த பிறகு ப்ரௌன் நிறத்துக்கு மாறிவிடும். மற்ற பூக்கள் காய்ந்த பிறகு மணம் குறைந்து, இழந்துவிடும். ஆனால், மகிழம்பூவோ காய, காய மேலும் அதன் நறுமணம் அதிகரிக்கும். இதனை மகிழம்பூவின் தனிச்சிறப்பு என்றே சொல்லலாம்.
அதனால்தான் தெய்வங்களுக்குக் கூட. காய்ந்திருந்தாலும் மகிழம்பூவினை மாலையாக அணிவிக்கிறார்கள். திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலின் தல விருட்சமே மகிழம் மரம்தான் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கும். மகிழ மரத்தின் காய், பழம், இலை, பூ, பட்டை என அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் வாய்ந்தவை. இவை குறித்தான சித்த மருத்துவ குறிப்புகள் அதிகம் கிடைக்கிறது.

மகிழம் காய்..
மகிழம் காயை பல்லில் வைத்து மெல்லும்போது அதிலிருந்து ஒரு பால் வரும். அப்படியே சாப்பிடலாம். அந்த காய் நல்ல துவர்ப்பாக இருக்கும்.மகிழம் காயை சாப்பிட்டால் உடனடியாக பல் வலி குறையும். 15 நாட்கள் அல்லது ஒரு மாதம் தினமும் ஒரு மகிழம் காயை சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையும். ஈறுகள் இறுகி பல் ஆடுவது நிற்கும்.

மகிழம் பழம்..
மகிழம் பழம் நல்ல வாசனையாக இருக்கும். சாப்பிட சுவையாக இருக்கும். மகிழம் பழம் சாப்பிட்டால் ஒற்றை தலைவலி எனப்படும் மைக்ரேன் தலைவலி குறையும். தசைகளின் இறுக்கம் கொஞ்சம் தளர்வதால் தலைவலி நீங்குவதோடு நல்ல தூக்கம் வரும். அத்துடன் மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவையும் நீங்கும். ஒன்று அல்லது இரண்டு பழங்கள்
சாப்பிடலாம்.

மகிழம்பூ..
மகிழம்பூவை கஷாயம் போல் காய்ச்சி குடிக்கலாம். 10 பூக்கள் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளராக சுண்டும் வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக ஒற்றைத் தலைவலி குறையும். பல் வலி உள்ளவர்கள் மகிழம்பூவுடன் கிராம்பு சேர்த்து கஷாயம் செய்து அருந்தலாம்.
மகிழம்பூவை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து மூக்குப்பொடி போல் உறிஞ்ச தலையில்,கோர்த்துக்கொண்டிருக்கும் நீர் வெளியேறி தலைவலி குறையும். தலை பாரமும் குறையும். மகிழம்பூ கஷாயத்துடன் கல்கண்டு மற்றும் பால் சேர்த்து இரவு உறங்குவதற்கு முன் அருந்தி வர உடல் வலிமை பெறும். உடல் வெப்பம் குறையும்.

மகிழம் பட்டை..
மகிழம்பட்டையை உலர்த்தி பொடி செய்து அதனை ஒரு சிட்டிகை அளவு எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு அந்த நீர் அரை டம்ளர் அளவுக்கு குறையும் (வற்றும்) வரை கொதிக்க விட வேண்டும். அந்த கஷாயத்தைப் பருக கருப்பை பலப்படும். இந்த கஷாயம் பருக காய்ச்சலும் குறையும். மகிழம் மரத்தின் பாகங்கள் உடல் வெப்பத்தைக் குறைக்கும் தன்மை உடையவை.
அந்த பொடியை தேங்காய் எண்ணெயில் குழைத்து தடவி வர பாத வெடிப்புகள் குறையும். தோல் வறட்சிக்கும் இப்படி செய்து வர தோலில் உண்டாகும் வறட்சி நீங்கும். கருவேலம்பட்டை போல் மகிழம் பட்டைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது. மகிழம் பட்டைகளை கொதிக்க வைத்து வாய் கொப்புளித்து வர வாய்ப்புண் குறையும்.

மகிழம் இலைகள்..
மகிழம் இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய நீரை கொண்டு உடலை துடைக்க உடல் வெப்பம் குறைந்து காய்ச்சல் குறையும். மகிழம் இலைகளையும் பல் பொடியுடன் சேர்த்து உபயோகிக்கலாம். பற்களுக்கு நல்லது.

மகிழம் விதை..
மகிழம் விதைகளை காய வைத்து பொடி செய்து சிறிதளவு (ஒரு கிராம்) எடுத்து தண்ணீரில் கொதிக்க விட்டு கல்கண்டு மற்றும் பால் சேர்த்து குடித்து வர உடல் வலிமை பெறும். உடல் அழகு பெறும். ஆண்மையும் பெருகும். மகிழம் விதைகளை பாலில் அரைத்தும் சாப்பிடலாம். தாது விருத்தி அதிகரிக்கும். அதிகம் சாப்பிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

மகிழம்பூவில் உள்ள வேதிப்பொருட்கள்..
கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து, பீட்டா அமைரின், ஆல்பா ஸ்பைனோ ஸ்பீரால், பீட்டா குளுக்கோசைடு,
பால்மடிக், ஒலியிக் அமிலங்கள்.

மருந்தியல் செயல்பாடுஇலைச்சாறு- நோய்களைத்தரும்,நுண்ணுயிர்களை எதிர்க்கும் Antibacterial activity தன்மை கொண்டதாகவும், இதன் நறுமண எண்ணெய் பூஞ்சைகளுடன் போராடும் தன்மை உடையதாகவும், பூச்சாறு,உடல்வெப்பம்,தணிப்பதாகவும், மகிழம்பட்டை Anti inflammatory குணம் கொண்ட அழற்சி நீக்கியாகவும், ஆண்மை பெருக்கியாகவும் செயல்படுகிறது. மகிழம் மரத்தின் பாகங்களை பயன்படுத்தி நல்ல பலன் பெறுங்கள்!

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%82/feed/ 0
பொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்..!! https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/ https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/#respond Sat, 31 Jan 2026 06:19:17 +0000 https://tamilyugam.in/?p=231688 பொடுகு, தலைமுடி பிரச்சனைக்கு தீர்வு தரும் தயிர்..!!

உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம். தலைமுடிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்துவிதமான நோய் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பளபளப்பான, மென்மையான கூந்தலை பெறுவதற்கும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.

பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் தயிருடன், வெந்தயம், எலுமிச்சை சாறு சேர்த்து நிவாரணம் பெறலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும். தொடர்ந்து வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.

பெண்கள் சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். முதலில் 20 செம்பருத்தி இதழ்களையும், 10 வேப்பிலைகளையும் மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ள வேண்டும் அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி வந்தால் கூந்தல் பளபளப்பாக மின்னும்.

கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுப்பதற்கும் தயிரை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவ வேண்டும்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%af%81-%e0%ae%a4%e0%ae%b2%e0%af%88%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a9%e0%af%88/feed/ 0
வெந்நீரில் கால் வைப்பதால் இத்தனை நன்மைகளா..?? https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/#respond Sat, 31 Jan 2026 06:13:36 +0000 https://tamilyugam.in/?p=231679  

தினமும் 15 நிமிடங்கள் வரை வெதுவெதுப்பான நீரில் கால்களை வைத்தால் சில நன்மைகள் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறுகின்றனர்.

*மன அழுத்தம் குறையும்.

*ரத்த ஓட்டம் சீராகும்.

*தலைவலி குறையும்.

*தசைவலி, தசைப்பிடிப்பு இல்லாமல், தசைகளை தளர்வோடு வைத்திருக்கும்.

*பாத வெடிப்புகள் இருந்தால், அவை சரியாகும்…..

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a8%e0%af%80%e0%ae%b0%e0%af%8d/feed/ 0
தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்..!! https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/ https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/#respond Tue, 27 Jan 2026 08:51:26 +0000 https://tamilyugam.in/?p=231603 தினமும் ஒரு டம்ளர் பப்பாளி ஜூஸ்..நன்மைகளோ ஏராளம்…

பப்பாளியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளதால் இதனை தினமும் உட்கொள்வது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது.
* பப்பாளியில் ஏராளமான நார்ச்சத்து இருப்பதால் குடலில் உள்ள டாக்சின்களை வெளியேற்றுகிறது, அத்துடன் குடல் புற்றுநோய் வராமலும் பாதுகாக்கிறது.

* அதுமட்டுமின்றி செரிமானத்திற்கு உதவுகிறது, மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வாகிறது.

* உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்த பழமாகும், மேலும் ரத்த நாளங்களுக்கு சத்துக்களை வழங்குகிறது.

* தினமும் குடித்து வருவதன் மூலம் நுரையீரலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி சுவாச பிரச்னைகளால் வராமல் பாதுகாக்கிறது.

* மேலும் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவதை தடுக்கலாம்.

* இதிலுள்ள பாப்பைன் என்ற நொதியினால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு சருமம் பொலிவடைகிறது…

]]>
https://tamilyugam.in/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%ae%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81-%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be/feed/ 0
30 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழனுமா..? கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!! https://tamilyugam.in/30-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/ https://tamilyugam.in/30-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/#respond Mon, 26 Jan 2026 05:29:55 +0000 https://tamilyugam.in/?p=231550 30 வயதிற்கு மேல் ஆரோக்கியமாக வாழனுமா..? கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவுகள்..!!

அக்காலத்தில் 50 வயதிற்கு மேல் தான் பல ஆரோக்கிய பிரச்சனைகளைச் சந்திக்க நேர்ந்தது. ஆனால் இக்கால தலைமுறையினர் 40 வயது வரை ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்ந்தாலே அது அதிசயமாக உள்ளது.

ஏனெனில் 30 வயதிலேயே பல்வேறு உடல்நல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள். இதற்கு அவர்களின் வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கங்களும் தான் முக்கிய காரணம்.
இவற்றால் இதய நோய், நீரிழிவு, கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை போன்ற பலவற்றை இளமையிலேயே பலர் சந்தித்து சமாளித்து வருகிறார்கள். உங்களுக்கு 30 வயதாகிவிட்டதா?

உடலில் பிரச்சனைகள் ஏதும் வராமல் இருக்க வேண்டுமா? அப்படியெனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டு வாருங்கள். இவற்றால் 30 வயதிற்கு மேல் நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம்.

ஓட்ஸ்
ஓட்ஸில் உள்ள பீட்டா-குளுக்கான்கள் என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது. இவை உடலில் தேங்கியுள்ள தேவையற்ற கொழுப்புக்களை கரைக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் இதயத்திற்கு செல்லும் தமனிகளின் சுவர்களில் கொழுப்புக்கள் தங்கி இரத்த ஓட்டத்திற்கு தடை ஏற்படுத்துவதைத் தடுத்து, இதய பிரச்சனைகள் வருவதைத் தடுக்கும். மேலும் இது ஆய்வுகளிலும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

செர்ரிப் பழங்கள்
செர்ரிப் பழங்களில் ஆந்தோசையனின்கள் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வளமாக நிறைந்துள்ளது. இவை கீல்வாதம் மற்றும் முடக்குவாதம் போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றில் காலை வேளையில் 200 கிராம் செர்ரிப் பழங்களை எடுத்து வந்தவர்களுக்கு, உடலில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளின் அளவு 60 சதவீதம் குறைந்துள்ளது தெரிய வந்துள்ளது. எனவே வாரத்திற்கு 3-4 முறை ஒரு டஜன் செர்ரிப் பழங்களை உட்கொண்டு வருவது நல்லது.

பாதாம்
ஆய்வு ஒன்றில் 20 பேர் தினமும் 60 கிராம் பாதாமை 4 வாரங்கள் தொடர்ந்து உட்கொண்டு வந்ததால், 9 சதவீதம் இரத்த சர்க்கரை அளவு குறைந்ததோடு, இதய நோய் மற்றும் நீரிழிவின் தாக்கத்தை குறைப்பது தெரிய வந்துள்ளது. மற்றொரு ஆய்வில் 22 பேர் பாதாமை உட்கொண்டு வந்ததில், 6 சதவீதம் கெட்ட கொலஸ்ட்ராடல் அளவு குறைந்ததோடு, 6 சதவீதம் நல்ல கொலஸ்ட்ராலின் அளவு அதிகரித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. எனவே பாதாமை உப்பு சேர்க்காமல், சாப்பிடுவது நல்லது.

]]>
https://tamilyugam.in/30-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%87%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%b0%e0%af%8b%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae/feed/ 0
வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே மாரடைப்பு ஏற்படுமா..?? பகீர் கிளப்பும் ஆய்வு தகவல்..!! https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d/ https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d/#respond Thu, 22 Jan 2026 09:27:36 +0000 https://tamilyugam.in/?p=231363

பொதுவாகவே மனிதர்கள் மட்டுமன்றி சில விலங்குகளுக்கும் கூட கோபம் வருவது வழக்கம். உளவியல் ரீதியாக நமது மனம் ஏற்றுக்கொள்ளாத மனதிற்கு பிடிக்காத விடயங்கள் நடக்கும் போது கோபம் ஏற்படுகின்றது.

ஆனால் சில விநாடிகள் கோபப்படுவது கூட உடல் ரீதியாக பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.

 

இது ஆரோக்கியத்தில் எந்தளவு பாதக தாக்கங்களை ஏற்படுத்துகின்றது என நம்மில் பலரும் அறிந்திருப்பதில்லை.

குறிப்பிட்ட சில  நிமிடங்கள் கோபப்படுவது கூட மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற உயிரை பறிக்கும் நோய்களுக்கு காரணமாக அமைகின்றது என ஆய்வுகளின் மூலம் தெரியவருகின்றது.

 

கோபம் கொள்வது மிகவும் ஆபத்தானது என அனைவரும் அறிந்திருப்பினும்  கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் பலருக்கும் இருப்பதிலை்லை.

 

கோபம் மாரடைப்பை ஏற்படுத்துமா?

கோபத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவை சேர்ந்த American Heart Association என்ற ஆய்வு நிறுவனம், 280 இளைஞர்களை வைத்து மேற்கொண்டுள்ள ஆய்வுகளின் மூலம் சில நிமிடங்கள் நாம் கோபப்படுவதால் எத்தகைய பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தெரியவந்துள்ளது.

 

 

 

அந்த வகையில் ஆரோக்கியமான இளைஞர்களைக் கொண்டு, சோகம், மகிழ்ச்சி, கோபம் மற்றும் பதற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் 4 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ஆய்வின் முடிவுகளின் அடிப்படையில் American Heart Association வெளியிட்டுட்ட அறிக்கையில் கோபப்படுவதால் ரத்த நாளங்கள் அதிகளவில் பாதிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.

 

அதனால் இதயத்தில் பாரியளவில் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மற்ற குழுவினருடன் ஒப்பிடும்போது, கோபத்தின் அடிப்படையில் மேற்கொண்ட ஆய்வில், அந்த குழுவில் இருந்தவர்களுக்கு ரத்த நாளங்களின் விரிவாக்கம் கணிசமாக குறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ரத்த நாளங்களின் விரிவாக்கம் குறையும் போது அது  நேரடியாக தமனி செயல்பாட்டை பாதிப்பதால், இதய நோய், மாரடைப்பு, பக்கவாதம் மற்றும் சீறுநீரக பாதிப்பு போன்ற பாரிய தாக்கங்களை ஏற்படுத்துகின்றது.

இதனடிப்படையில் வெறும் 8 நிமிடங்கள் கோபப்பட்டாலே இதய ஆரோக்கியம் வலுவாக பாதிக்கப்படுவதுடன் மாரடைப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதனை தவிர்த்துக்கொள்ள முடிந்தளவு கோபத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

]]>
https://tamilyugam.in/%e0%ae%b5%e0%af%86%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-8-%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%95%e0%af%8b%e0%ae%aa%e0%ae%aa%e0%af%8d/feed/ 0
முள்ளங்கியை உணவில் சேர்த்து வர என்ன நன்மை தெரியுமா..?? https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/ https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/#respond Wed, 21 Jan 2026 07:27:13 +0000 https://tamilyugam.in/?p=231256 பொதுவாக உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் முள்ளங்கியை தங்கள் தினசரி உணவு சேர்த்துக் கொள்ளலாம் இது உங்களை நீண்ட நேரத்திற்கு நிறைவாக வைத்திருக்கும்.
முள்ளங்கியில் உள்ள வைட்டமின் C போலிக், ஆசிட் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சத்துக்கள் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை தருகின்றன.
முள்ளங்கியை தொடர்ந்து சாப்பிட்டு வர உயர் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். மேலும் இவ்வளவு ஆரோக்கியம் தரும் முள்ளங்கியால் நம் உடல் பெரும் நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம்

1.முள்ளங்கியில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற உடலுக்கு அத்தியாவசியமான பல ஊட்டச்சத்துக்கள் காணப்படுகின்றன.
2.இதை உங்கள் உணவில் சேர்த்து வர உடல் எடையை குறைப்பதும் முதல் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை ஏராளமான நன்மைகளை பெற முடியும்.
3.முள்ளங்கியில் அதிக அளவுள்ள வைட்டமின் C நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகிறது.
4.இதை உணவில் சேர்த்து வர சளி இருமல் போன்ற பல உடல்நல பிரச்சனைகளை தடுக்கலாம்.
5.முள்ளங்கி ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்கிறது மற்றும் இளம் வயதிலேயே ஏற்படும் வயது முதிர்வையும் தடுக்கிறது.
6.முள்ளங்கியில் நிறைந்துள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்திற்கு மிகவும் நல்லது. இது மல இயக்கத்தை எளிதாக்கவும் உதவுகிறது.
7.முள்ளங்கியை உணவில் சேர்த்து வர உடல் பருமன், வாயு, குமட்டல் போன்ற பல பிரச்சனைகளை தடுக்கலாம்.
8.முள்ளங்கியில் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் உள்ளன. இதில் உள்ள சேர்மங்கள் புற்றுநோய் மற்றும் கட்டிகளின் வளர்ச்சியை தடுக்கின்றன.
9.முள்ளங்கியில் நிறைந்துள்ள நீர்ச்சத்து உங்களை நாள் முழுவதும் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
10.முள்ளங்கி இரத்தத்தில் ஆக்ஸிஜன் விநியோகத்தை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது.
11.மேலும் முள்ளங்கியை சாப்பிட்டு வர உடல் சூட்டையும் குறைக்கலாம்.

 

]]>
https://tamilyugam.in/%e0%ae%ae%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%af%88-%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%87%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/feed/ 0