Varicose Vein எனப்படும் நரம்பு சுருட்டல் எதனால் ஏற்படுகிறது?.. அதற்கு தீர்வு என்ன?..

நம்மில் பலர் காலில் நரம்பு இழுக்கிறது என்று கூறுவதை கேட்டிருப்போம். சிலருக்கு நரம்பு சுரண்டு வெளியில் தெரியும்படி இருப்பதை பார்த்திருப்போம். இதே Varicose Vein அல்லது நரம்பு சுருட்டல் என்று கூறுவார்கள். நரம்புகளில் உள்ள வால்வுகள் சரியாக செயல்படத் தவறினால் ரத்தம் தேங்கி பாதிக்கப்பட்ட நரம்புகளுக்குள் அழுத்தம் அதிகரிப்பதால் varicose vein ஏற்படுகிறது. இது எதனால் ஏற்படுகிறது இதை எப்படி சரி செய்வது என்பதை பற்றி இனி காண்போம்.

Varicose Vein ஏற்படுவதற்கு முக்கியமான காரணமாக பார்க்கப்படுவது வயது மற்றும் மரபியல் மாற்றம். வயதாகும்போது நரம்பு வால்வுகளில் ஏற்படும் இயற்கையான தேய்மானம் அவற்றின் செயல் இழப்புக்கு வழிவகுக்கும். குடும்ப வரலாறு உள்ளவர்களுக்கும் பாரம்பரியமாக இந்த நரம்பு சூழல் நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது.

நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது அல்லது நீண்ட நேரம் நிற்பது போன்ற வேலை செய்பவர்களுக்கு நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தி இரத்த ஓட்டத்தை தடுக்கும். Varicose Veins வருவதற்கு இதுவும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பெண்களுக்கு முக்கியமாக பார்க்கும் போது கர்ப்பம் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் நரம்புகளை வலுவிழக்க செய்து Varicose Vein வருவதற்கான வாய்ப்பை ஏற்படுகிறது.

உடல் பருமன் கூட Varicose Vein ஏற்படுவதற்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதிக எடை நரம்புகளில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். இதனால் ரத்தத்தை சரியாக கொண்டு செல்லும் திறனை பாதித்து நரம்பு சுருட்டல் ஏற்படலாம்.

Varicose Veins வருவதை அறிந்து கொள்வதற்கு நரம்பில் தொடர்ந்து வலி, துடித்தல், கால்களில் தசை பிடிப்பு ஆகியவற்றை ஏற்படும் போது நீங்கள் கவனத்தில் கொண்டு இதற்கான சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். இது தவிர வீக்கம், அலர்ஜி, தொழில் மாற்றங்கள், புண்கள் மற்றும் ரத்தப்போக்கு ஆகியவையும் வருவதற்கான அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது.

Varicose Veins ஒருவருக்கு வந்துவிட்டால் அதற்கான சிகிச்சைகளாக பார்க்கப்படுவது. உடற்பயிற்சி செய்வது ஆரோக்கியமான எடையை பராமரித்தல் நீண்ட நேரம் உட்கார்ந்து இருப்பது அல்லது நின்று வேலை பார்ப்பதை தவிர்ப்பது போன்றவை ஆகும். இது தவிர Varicose veinsகாகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட சுருக்க காலுறைகளை அணிவதால் கால்களில் வெளிப்புற அழுத்தத்தை வழங்குகிறது. இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது.

Varicose Veinsகாகவே தனியாக லேசர் சிகிச்சை இருக்கிறது. குறைந்தபட்ச ஊடுருவம் லேசர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் போது நரம்புகளை சூடாக்கி சரி செய்யும். இதற்கு லேசான மயக்க மருந்தின் கீழ் இந்த சிகிச்சை செய்வார்கள். அதிகபடியாக இருப்பவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. நரம்புகளில் சிறிய கீறல்கள் செய்து அவற்றை சிறிய வெட்டுக்கள் மூலம் இது சரி செய்யப்படுகிறது. சரியான உடற்பயிற்சி சரிவிகித ஊட்டச்சத்துடன் உணவு ஆகியவற்றை எடுத்துக் கொண்டாலே பலவித நோய்கள் வந்து நம்மளை பாதுகாக்க முடியும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

Read Previous

ரூ.7 முதலீட்டில் ரூ.5000 வழங்கும் மத்திய அரசின் திட்டம்..!!

Read Next

India vs Bangladesh, 2nd Test: இந்தியா வெற்றி பெற 95 ரன்கள் மட்டுமே தேவை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular