#Watch: தலை விக், ப்ராவுக்குள் வைத்து ரூ.8 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்..!! உகாண்டா பெண் மும்பையில் கைது.!!

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வரும் இந்தியர்கள் தங்கம் உட்பட பொருள்களை கடத்தி வந்து சிக்குவது தொடர்கதையாக இருப்பது ஒருபுறம் இருந்தாலும் மற்றொரு பக்கத்தில் வெளிநாட்டை சார்ந்தவர்கள் போதை பொருட்கள் கடத்தி வந்து இந்திய சுங்கத் துறை அதிகாரிகளிடம் சிக்கிக்கொள்கின்றனர்.

இவர்களும் தங்க கடத்தலை போலவே போதை பொருட்களை கடத்த பல்வேறு நுணுக்கமான செயல்களை மேற்கொண்டாலும், அதனை அதிகாரிகள் திறம்பட கண்டறிந்து தவிடுபொடி ஆக்கி வருகின்றனர்.

இந்நிலையில் இன்று உகண்டா நாட்டில் இருந்து மும்பை வந்த பெண்மணி தனது தலை மற்றும் பிராவில் வைத்து 8 கோடி மதிப்பிலான கோகையின் vன்ற போதை பொருளை கடத்தி சிக்கிக் கொண்டு உள்ளார். அவர் தனது தலையில் தலைமுடிக்குள் எப்படி போதை பொருளை பதுக்கி வைத்து கடத்தினார் என்பது தொடர்பான வீடியோ தற்பொழுது வெளியாகி உள்ளது. மும்பை விமான நிலையத்தில் 8 கோடி மதிப்பு உள்ள இந்த கோகைனை அவள் விக் மற்றும் பிராவில் மறைத்து வைத்திருந்தாள்.  முழு வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Read Previous

கொசு மருந்து குடித்த ஒன்றரை வயது குழந்தை பரிதாப பலி..!! பெற்றோரின் அலட்சியத்தால் நடந்த சோகம்.!!

Read Next

“அசினை தமிழ்த் திரையுலகம் கண்டுகொள்ளாதது ஏன் தெரியுமா..?” வெளியான காரணம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular