இன்றைய காலகட்டத்தில் மொபைல் போன் அனைவரின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகியுள்ளது. இவ்வாறு மொபைல் போன் பயன்படுத்தும் அனைவரும் WhatsApp பயனர்களாகவே இருந்து வருகின்றனர். WhatsApp நிறுவனமானது அவ்வப்போது பயனர்களுக்கு பல்வேறு அப்டேட்களை வழங்கி வருகிறது. இதன்மூலம் தொடர்ந்து பயனர்களை தக்கவைத்து கொண்டுள்ளது WhatsApp நிறுவனம். மொபைல் போனில் மட்டுமல்லாமல் கம்ப்யூட்டர்களிலும் WhatsApp பயன்படுத்தப்பட்டு வருகிறது.
WhatsApp Video Call -ல் AR (Augmented Reality) தொழில்நுட்பத்தை புகுத்த மெட்டா நிறுவனம் திட்டம். ஐபோன்களில் இதற்கான சோதனையை தொடங்கியுள்ளது. இதன்மூலம் வீடியோ கால் பேசும் பயனர்கள் FILTER, BACKGROUND-களையும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஒவ்வொரு முறையும் இந்த Setting-ஐ மாற்றிக் கொண்டே இருக்கத் தேவையில்லை என்றும் அவற்றை Save செய்து வைத்து அடுத்தடுத்த கால்களுக்கும் பயன்படுத்திக்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.