
முன்பெல்லாம் கொள்ளை அடிக்க வேண்டுமென்றால் ஒருவரின் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையடிப்பார்கள். ஆனால் இப்போதெல்லாம் நம்மளது போனுக்கே கால் செய்தோ அல்லது மெசேஜ் அனுப்பியும் திருடுகிறார்கள். இப்படிப்பட்ட குற்றங்கள் பலகாலம் அது இங்கு நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதிலும் இன்று ஒரு புது வகையான குற்றம் மத்திய பிரதேசத்தில் நடந்துள்ளது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று காவல்துறை கூறுகிறது.
மத்திய பிரதேசத்தில் ஒருவரின் whatsapp க்கு ஒரு புகைப்படத்தை அனுப்பி அழைத்துள்ளனர். அந்த போன் காலில் திருடன் அந்த புகைப்படத்தில் இருப்பது யார் என்று தெரிகிறதா என்று கேட்டுள்ளார். அப்போது அந்த நபரோ அந்த புகைப்படத்தை டவுன்லோட் செய்து உள்ளார். அவ்வளவுதான் அவரது போனை ஹேக் செய்துவிட்டு திருடன் கால் யை துண்டித்து விட்டான்.
அவரது அக்கவுண்டில் இருக்கும் இரண்டு லட்சம் பணமானது திருடப்பட்டது. இதனையடுத்து போலீசாரிடம் புகார் கொடுத்த அந்த நபருக்கு இது ஒரு சைபர் குற்றவாளிகளின் வளையாகும் என்று தெரியவந்துள்ளது. இதனால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சைபர் போலீசார் தெரிவித்துள்ளனர்.