வீட்டை சுற்றி வரும் எறும்புகள் அதிர்ஷ்டம் கொடுக்குமா?.. பலனை தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே வீட்டினுள் எறும்பு வருவது ஒரு சாதாரண விடயமாகவே கருதப்படுகின்றது. குறிப்பாக உணவுப் பொருட்களோ, இனிப்புகளோ கீழே சிந்தும் பொழுது அதில் உடனடியாக எறும்புகள் மொய்க்க தொடங்குவதை நம்மால் பார்க்க முடிகிறது.

ஆனால் இதற்கும் ஆன்மீக ரீதியாக சில பலன்கள் உண்டு என்று கூறுகிறார்கள் ஜோதிடர்கள், அது குறித்து இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.

 

கறுப்பு எறும்புகள்

வீட்டை பொருத்தவரை கருப்பு எறும்பு, சிவப்பு எறும்பு என்று இந்த இருவகை எறும்புகள் தான் பெரும்பாலான நேரங்களில் நமது வீட்டிற்குள் வரும்.

சுவற்றில் வரிசையாக ஏறிக் கொண்டிருக்கும் எறும்புகளை நாம் தினமும் சர்வ சாதாரணமாக கடந்து செல்கிறோம்.

 

ஆனால் இதிலும் மிகப்பெரிய ஆன்மீகம் ஒளிந்து இருக்கிறது என்றும், இந்த எறும்புகள் நமது வீட்டுக்குள் வரும் திசையை வைத்துக் கூட அதற்கான பலன்களை கூற முடியும் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.

கருப்பு எறும்புகள் பொதுவாக இவ்வகை எறும்புகள் நாம் கடவுளாக சில சமயங்களில் வணங்குவதும் உண்டு. அது போல தான் வீட்டிற்குள் கருப்பு எறும்பு சுற்றி வந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது.

 

அதிக அளவில் இந்த கருப்பு எறும்புகள் வீட்டுக்குள் ஓடி வரும்பொழுது அதிர்ஷ்டம் அந்த வீட்டை தேடி வரப் போகிறது என்றும், அந்த வீட்டினுடைய நிதி நிலை பெரிய அளவில் உயரப்போவதற்கான ஒரு அறிகுறியாகவே இது கருதப்படுகின்றது.

 

 

சிவப்பு எறும்புகள்

பொதுவாக சிவப்பு எறும்புகள் வீட்டுக்குள் வருவதை பலரும் விரும்ப மாட்டார்கள், காரணம் அது கடித்தால் ஒரு மெல்லிய வலியும், கொப்பளமும் ஏற்படுவதுடன் இதில் சிறிதளவு விஷ தன்மையும் காணப்படவதால் இது குழந்தைகளுக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடும்.

 

 

அதேபோல சிவப்பு எறும்புகள் ஆன்மீக ரீதியாக கெட்ட சகுனமாகவே பார்க்கப்படுகிறது. அதிக அளவில் சிவப்பு எறும்புகள் வீட்டுக்குள் நடமாடினாள் அந்த வீட்டில் பண வரவு குறையும் என்றும் மகிழ்ச்சியும், சந்தோஷமும் குறையும் என்றும் கருதப்படுகிறது.

 

 

அதேபோல மேற்கு திசையில் இருந்து எறும்புகள் வீட்டுக்குள் வந்தால், வீட்டில் உள்ள யாரோ ஒருவர் வெளிநாடு பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்பதை அது சுட்டிக்காட்டுவதாக கூறப்படுகிறது.

Read Previous

பைல்ஸ் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முள்ளங்கி இலை.. எப்படி-ன்னு தெரிஞ்சிக்கோங்க..!!

Read Next

தினமும் காலையில் ஒரு ஸ்பூன் நெய்யை சாப்பிடுங்க.. இந்த நோய் கிட்டக் கூட வராதாம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular