செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் முட்டை மசாலா குழம்பு.. எப்படி செய்வது..??

பொதுவாகவே புரததிற்கான மிகச் சிறந்த மூலமாக முட்டை காணப்படுகின்றது. முடி உதிர்வு பிரச்சினை தொடக்கம் சரும பாதுகாப்பு வரை உடல் ஆரோக்கியத்தில் முட்டை முக்கிய இடம் வகிக்கின்றமை அனைவரும் அறிந்ததே.

உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தினசரி ஒரு முட்டை சாப்பிட வேண்டியது அவசியம்.

 

 

இத்தனை ஊட்டச்சத்துக்கள்  நிறைந்த முட்டையை கொண்டு அனைவரும் விரும்பும் வகையில் சுவையான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு எவ்வாறு தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

 

 

 

தேவையான பொருட்கள்

முட்டை – 3

பெரிய வெங்காயம் – 1

உப்பு – சுவைக்கேற்ப

 

 

அரைக்க தேவையானவை

துருவிய தேங்காய் – 2 மேசைக்கரண்டி

தக்காளி – 2

பூண்டு – 3 பல்

மஞ்சள் தூள் – 1/4 தே.கரண்டி

சிவப்பு மிளகாய் தூள் – 1 தே.கரண்டி

கொத்தமல்லி தூள் – 3 தே.கரண்டி

கருப்பு மிளகு – 1/2 தே.கரண்டி

பெருஞ்சீரகம் – 1 தே.கரண்டி

 

 

தாளிக்க தேவையானவை

எண்ணெய் – 2 மேசைக்கரண்டி

இலவங்கப்பட்டை – 1

பெருஞ்சீரகம் – 1 தே.கரண்டி

கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை

 

முதவில் முட்டையை அவித்து தோல் நீக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர்  துருவிய தேங்காய், தக்காளி, கருப்பு மிளகு, பூண்டு, பெருஞ்சீரகம், மஞ்சள் தூள், சிவப்பு மிளகாய் தூள் மற்றும் கொத்தமல்லி தூள் ஆகியவற்றை  ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்றாக பேஸ்ட் பதத்தில் அரைத்து எடுத்து கொள்ள வேண்டும்.

 

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, பெருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு வதக்கிக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதனுடன்  பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாகும் வரையில் நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் அரைத்து வைத்துள்ள மசாலா பேஸ்ட்டை சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும்.

 

பின்னர்  தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் எண்ணெய் பிரிந்து வரும் வரை கொதிக்க வைக்க வேணடடும்.

பின்னர் அதில் அவித்த முட்டைகளைச் சேர்த்து குறைந்த தீயில் 5 நிமிடங்கள் வரை வேக வைத்து இறக்கினால் செட்டிநாட்டு ஸ்டைலில் மணமணக்கும் முட்டை மசாலா குழம்பு தயார்.

 

சப்பாத்தி, பூரிக்கு மட்டுமின்றி, நாண், புல்கா மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடவும் மிகவும் சுவையாக இருக்கும்.

Read Previous

கோடையில் உடல் குளுகுளுவென இருக்க வேண்டுமா?.. அருமையான ‘நுங்கு சர்பத்’..!!

Read Next

உடல் சூட்டை சட்டென குறைக்கும் வெந்தயக் களி..!! செய்முறை விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular