“அமுதன் கொலை அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மணி” – கிருஷ்ணசாமி!

 

 

கோவை இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி மாணவர் அமுதன், சக மாணவர்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் தற்போதைய அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணி என புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

 

மாணவர் அமுதன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, உண்மையான காரணங்களை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இந்த விவகாரத்தில் கல்வித்துறை அமைச்சர்கள் பதில் அளிப்பதை விட, சட்டம்-ஒழுங்கு பொறுப்பை தன் வசம் வைத்திருக்கும் முதலமைச்சர் விஜய் நேரடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.

 

மேலும், கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நடைபெறாமல் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Read Previous

டாஸ்மாக் முறைகேடு வழக்கு: விசாரணைக்கு தடை கோரிய மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு!

Read Next

தினமும் 30 நிமிட உடற்பயிற்சி: ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular