ஆந்திரப் பிரதேசத்தில் அரசுப் பள்ளிகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க, கல்வித்துறை சார்பில் 6,534 ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில் 3,597 இடைநிலைக் கல்வி ஆசிரியர் (SGT) பணியிடங்களும், 2,937 பள்ளி உதவியாளர் பணியிடங்களும் அடங்கும்.
SGT ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10,000 ஊதியமும், பள்ளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.12,500 ஊதியமும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த மாதம் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆசிரியர் பணியை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு முக்கிய வாய்ப்பாக அமைந்துள்ளது.




