இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு புதிய உச்சம்!

 

 

இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்கு ஜூலை மாதத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 50.8 சதவீதமாக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

ஜூலை மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தினசரி சராசரியாக 24.7 லட்சம் பீப்பாய்கள் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ததாக கூறப்படுகிறது.

 

மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் மற்றும் விநியோகத் தடைகள் காரணமாக கச்சா எண்ணெய் சந்தையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ரஷ்ய எண்ணெய் கொள்முதலில் அதிக கவனம் செலுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன் மூலம், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யா தொடர்ந்து முக்கிய பங்காற்றி வருவது தெரியவந்துள்ளது.

Read Previous

நயினார் நாகேந்திரன் பேச்சுக்கு அண்ணாமலை கண்டனம்! “அரசியல் களத்தின் தரத்தை உயர்த்த வேண்டும்”!

Read Next

லேப்டாப் சார்ஜர் போடும்போது மின்சாரம் தாக்கி மாணவர் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular