இந்த மாதிரி ஒரு டைம் உங்க வீட்ல நாட்டுக்கோழி வறுவல் செஞ்சு கொடுங்க..!!

Oplus_131072

இந்த மாதிரி ஒரு டைம் உங்க வீட்ல நாட்டுக்கோழி வறுவல் செஞ்சு கொடுத்தீங்கன்னா உங்களுக்கு பாராட்டு மழை பெய்யும். அந்த அளவிற்கு இந்த நாட்டுக்கோழி வறுவல் சுவையா இருக்கும்.

 

நாட்டுக்கோழி வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:

1/2 கிலோ நாட்டுக்கோழி
1/4 கப் நல்லெண்ணெய்
1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள்
உப்பு
1/2 தேக்கரண்டி சீரகத்தூள்
10 கருவேப்பிலை
அரைப்பதற்கு தேவையானவை
1 தேக்கரண்டி மிளகு
1 சிறிய தக்காளி
4தண்டு கொத்தமல்லி
1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
1/4 தேக்கரண்டி மிளகாய் தூள்

அருமையான நாட்டுக்கோழி வறுவல் எப்படி செய்வது என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

மிக்ஸியில் அரைப்பதற்கு குறிப்பிட்ட பொருட்களை சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும். குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்த விழுதை சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.இதில் நாட்டு கோரி துண்டுகள் தேவையான அளவு உப்பு மஞ்சள் தூள் சேர்த்து மேலும் இரண்டு நிமிடங்கள் வதக்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கோழிக்கறியை வேகவிட்டு எடுக்கவும்.வெந்தபின் குக்கரை திறந்து சீரகத்தூள் மற்றும் கருவேப்பிலை சேர்த்து கலந்து மூடிவிட்டு பத்து நிமிடங்கள் அப்படியே வைத்து அதன் பிறகு பரிமாறவும்.

Read Previous

பச்சைக் கற்பூரத்தை இப்படி உபயோகித்திருந்தால்.. இனிமேல் அப்படி செய்யாதீர்கள்..!!

Read Next

சிறுநீரக கற்களை அகற்றும் சட்னி..!! சுவையான மற்றும் சத்தான செய்முறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular