லட்ச கொட்டை கீரையின் அற்புதமான மருத்துவ பயன்கள்..!! இயற்கை வயாக்ரா..!!

 

கீரைகள் என்றாலே உடலுக்கு நன்மை தரக்கூடியதுதான் என்றாலும், சில கீரைகளை தெரிந்தே ஒதுக்கிவிடுகிறோம்.. சில கீரைகளை தெரியாமல் ஒதுக்கிவிடுகிறோம். அதில் ஒன்றுதான் இந்த லட்ச கொட்டை கீரை.

இந்த கீரைக்கு மட்டும் ஏகப்பட்ட பெயர்கள் உண்டு.. லச்லக்கெட்டை என்பார்கள்.. லச்சக்கொட்டை என்பார்கள்.. லச்ச கெட்ட கீரை என்பார்கள்.. நஞ்சு கொண்டான் கீரை என்பார்கள்.. நஞ்சுண்டான் கீரை என்பார்கள்.. இப்படி எத்தனையோ பெயர்களில் இந்த கீரைக்கு உண்டென்றாலும் லஜ்ஜை கீரை என்றே அதிகம் பயன்படுத்துகிறார்கள்.

லட்ச கொட்டை கீரை எந்த மண்ணிலும் வளரக்கூடியது, எந்த தட்பவெப்பநிலையிலும் வளரக்கூடியது. இது மருத்துவ குணம் மிகுந்தது. முழங்கால் வலி, முதுகு வலி ஆகியவற்றை நீக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. நுரையீரலில் தொற்றுக்கள் ஏற்பட்டால் அவைகளை போக்கக்கூடியது. லட்ச கொட்டை கீரை நுரையீரல் பாதிப்புகளை விலக்கி, சளித்தொல்லைகளை நீக்கும், சிறுநீர் நன்றாக பிரிந்து உடலில் உள்ள வீக்கங்களும் குறையும். இந்த கீரையை இயற்கை வயாக்ரா எனவும் கூறுவார்கள்.

Read Previous

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் சாறு குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

நீரிழிவு நோயாளிகளுக்கு மருந்தாகும் சர்க்கரை கொல்லி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular