(1) இரண்டு கைப்பிடி #கல்_உப்பை தண்ணீரில் கரைத்துக்கொண்டு மஞ்சள், எலுமிச்சை பழ சாறு ஆகியவற்றையும் சேர்த்து பூஜை அறையில் வைத்து இறைவனை பிரார்த்தனை செய்து வாரம் ஒரு முறை வீட்டின் தரையை தூய்மை படுத்துங்கள். இது வீட்டில் உள்ள கண் திருஷ்டியை விரட்டும்.
(2) உங்கள் வீட்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் #இடது_காலடி மண்ணை எடுத்து ஊருக்கு வெளியில் உள்ள #வேப்பமரத்தடியில் போட்டு விட்டு திரும்பி பார்க்காமல் வந்து விடுங்கள். இது வீட்டில் உள்ள நபர்களின் மீதுள்ள கண் திருஷ்டியை போக்கும்.
(3) #வெள்ளைப்_பூசணிக்காய் வாங்கி அதை இரண்டாக அரிந்து இரண்டிலும் மஞ்சள் மற்றும் குங்குமத்தை தடவி வீட்டு வாயிலில் வையுங்கள். இது கெட்ட ஆற்றல்களை உறிந்து கொண்டு சுருங்கிவிடும். பின்பு அந்த பூசணிக்காயை வார இறுதியில் எடுத்து நீர்நிலைகளில் போட்டு விடுங்கள்.
(4) பிரதிபலிக்கும் தன்மையை கொண்ட #கண்ணாடியை வீட்டு முக்கிய வாயிலின் மேல் மாட்டிக் கொள்ளலாம். இது யார் நீங்கள் கெட வேண்டும் என்று நினைக்கிறார்களோ அவர்களுக்கே அதை பிரதிபலிக்கும் ஆற்றல் கொண்டது இந்த கண்ணாடி.
(5) உங்கள் வீட்டில் , உங்களையும் சேர்த்து எத்தனை நபர்கள் இருக்கிறார்களோ அத்தனை #எலுமிச்சை பழத்தை வாங்கி கொண்டு வியாழக்கிழமை அன்று குரு ஓரையில் எலுமிச்சம் பழத்தை கொண்டு உங்கள் வீட்டில் உள்ள நபர்களின் தலையை Anticlockwise direction ல் சுற்றிய பின்பு, அதை உங்கள் ஊரில் உள்ள முச்சந்தியில் தூக்கி போட்டு விடுங்கள்.




