உடல் உஷ்ணத்தை போக்கும் அருமையான பானகம்… எப்படி செய்வது..??

Oplus_131072

 

கோடை காலங்களில் உடலிலிருந்து அதிகமான வியர்வை வெளியேறுவதால், நாம் சீக்கிரம் சோர்வடைந்து விடுகிறோம். இதிலிருந்து விடுதலையாகி உங்கள் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்க ’பானகம்’ சிறந்த சாய்ஸ். உங்கள் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே சுவையான பானகம் எப்படி தயார் செய்வது என்பதை பார்க்கலாம்!

தேவையான பொருட்கள்

புளி – சிறிய எலுமிச்சை அளவிலான உருண்டை, பனைவெல்லம் அல்லது வெல்லம் – 2 டேபிள் ஸ்பூன், ஏலக்காய் பொடி – 1/4 டீ ஸ்பூன், சுக்குப்பொடி – 1/4 டீ ஸ்பூன், மிளகுத்தூள் – 1/4 டீ ஸ்பூன், தண்ணீர் – 2 கப்

செய்முறை: வெல்லத்தை தட்டி பொடியாக்கி கொள்ளவும். புளியை 2 கப் தண்ணீரில் நன்கு கரைக்கவும். கரைத்த புளி நீரில் வெல்லத்தை சேர்த்து நன்றாக கலக்கவும். வெல்லம் முழுமையாக கரைந்தபின் வடிகட்டியால் இறுக்கவும்.

இதனுடன் ஏலக்காய்பொடி, சுக்குப்பொடி, மிளகுத்தூள் சேர்த்து கலக்கவும். இதை அப்படியே பருகலாம். சிறிது நேரம் மண்பானையில் வைத்திருந்து பருகினால் கூடுதல் சுவையுடன் இருக்கும். உடலையும் குளிர்ச்சியாக்கும்.

 

Read Previous

வெயில் காலத்தில் மூலநோய் வருவதற்கான காரணங்களும்… தீர்வுகளும்..!!

Read Next

உடலில் கெட்ட கொழுப்பு அதிகரித்துவிட்டதா?.. இதனை சாப்பிடுங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular