மக்களவைத் தலைவர் அளித்த தேநீர் விருந்தில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றதை சுட்டிக்காட்டி, “திமுக பாஜக கூட்டணியா?” என்ற கேள்வி எழுந்துள்ளதாக விசிக முதன்மைச் செயலாளர் ஆளூர் ஷா நவாஸ் தனது எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற கேள்விகள் தவெகவை நோக்கி எழாமல் இருக்க, சுதந்திர தினத்தையொட்டி ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை முதலமைச்சர் புறக்கணிப்பார் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தவெக அமைச்சரவையில் விசிக இடம்பெற்றுள்ள நிலையில், ஆளூர் ஷா நவாஸ் தொடர்ந்து அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை முன்வைத்து வருவது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.




