காதல் பிடிக்கவில்லை என கூறிய இளம்பெண்ணுக்கு தொல்லை: இளைஞர் கைது!

 

 

திருப்பத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் (27), சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணும் சுமார் 2 ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில், இளம்பெண் திடீரென விக்னேஷிடம் தனக்கு விருப்பமில்லை என தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ், இளம்பெண்ணை மிரட்டி தொடர்ந்து காதல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

இதுகுறித்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில், திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

பெங்களூருவில் தலிபான் தொடர்பு? காவலாளி கைது!

Read Next

கோவையில் யாசகம் கேட்பது போல வீடுகளை நோட்டமிட்ட 5 பெண்கள்? பொதுமக்கள் பிடித்தனர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular