Oplus_131072
வெள்ளை பூசணி பல்வேறு ஊட்டச்சத்துக்களையும் மருத்துவ குணங்களையும் பலவிதமான நோய்களுக்கு தீர்வாக உள்ள ஒரு காய் என்றால் அது பூசணிக்காய் என்று சொல்லலாம். குறிப்பாக மஞ்சளாக இருக்கும் இனிப்பு பூசணியை விட வெள்ளை பூசணியில் நீர்ச்சத்தும் நார்ச்சத்தும் மிக அதிகம்.
வெள்ளை பூசணிக்காய் போன்ற முழுக்க முழுக்க நீர்ச்சத்து இருக்கிற காய்கறிகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவதில்லை. குறிப்பாக சில குழந்தைகள் இதை பக்கத்தில் கூட சேர்ப்பதில்லை. ஆனால் அதன் அற்புதமான நன்மைகள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. நமது ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் அனைத்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ள பூசணி குளிர்ச்சியான நீர்ச்சத்து பண்புகளை கொண்டுள்ளது.
பெரும்பாலான நாகரிகம் என்ற பெயரில் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைக் கடைப்பிக்கின்றனர். பூசணி ஜூஸ் இவர்களுக்கு ஒரு மந்திர மருந்து போல் செயல்படுகிறது. இது உடலில் தீங்கு விளைவிக்கும் நச்சுகளை நீக்குகிறது மற்றும் சிறுநீர்ப்பையின் வழக்கமான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.
தினமும் காலையில் வெறும் வயிற்றில் பூசணி ஜூஸ் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவுகிறது. இருமல் மற்றும் சளி போன்ற மாறிவரும் காலநிலை நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாகவும் பூசணி பயன்படுத்தப்படுகிறது.
பூசணிக்காயில் கலோரிகள் மிக மிகக் குறைவாகவும், நீர்ச்சத்து அதிகமாகவும் இருப்பதால், கூடுதல் எடையை விரைவாகக் குறைக்க இந்த ஜூஸ் உதவுகிறது.
இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால், நீண்ட நேரத்திற்கு பசியை தூண்டுவதில்லை. அதோடு உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி விரைவாக எடையைக் குறைக்க உதவி செய்கிறது.
இந்த வெள்ளை பூசணியின் சாறு எடுத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு, உப்பு மற்றும் புதினா கலந்து தினமும் குடித்து வந்தால் உங்கள் குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.



