சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆக.16) நடைபெற்ற திமுக வழக்கறிஞர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
அப்போது, தன்னை கைது செய்து தஞ்சைக்கு அழைத்துச் சென்றபோது, “டிரிப் போவதுபோல ஜாலியாக சென்றோம்” என அவர் கூறினார்.
மேலும், தேர்தலுக்குப் பிறகு சோர்வடைந்திருந்த திமுகவினரை தற்போதைய அரசு மீண்டும் எழுச்சி பெறச் செய்துள்ளதாகவும் அவர் விமர்சித்தார்.
“தமிழ்நாடு மட்டுமின்றி, ஆட்சியில் அமர்ந்துள்ள சர்க்கஸ் கூடாரமே எதிர்பார்க்காத தேர்தல் முடிவுதான் வந்துள்ளது” என கூறிய உதயநிதி, அரசியல் சூழல் குறித்து கடுமையாக விமர்சனம் செய்தார்.




