Oplus_131072
சாண்ட்விச் பஜ்ஜி செய்வது எப்படி ..
தேவையானவை:
பிரெட் – 10 ஸ்லைஸ், கடலை மாவு – 150 கிராம், பச்சரிசி மாவு – 100 கிராம், மைதா மாவு – 100 கிராம், மிளகாய்த்தூள்- காரத்துக்துக்கேற்ப, மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், வறுத்த சீரகப்பொடி – 2 டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், பூண்டு – 4 பல் (தட்டியது), புதினா சட்னி – ஒரு கப், தக்காளி சட்னி – ஒரு கப், சோடா உப்பு – ஒரு சிட்டிகை, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை…….
ஒரு பிரெட் துண்டின் உள்பக்கம் புதினா சட்னியும், அடுத்த பிரெட் துண்டின் உள்பக்கம் தக்காளி சட்னியும் வைத்து மூடிவிடவும். பின் இதனை நான்கு துண்டுகளாக செய்யவும். இதே போல் எல்லா பிரெட் துண்டுகளையும் செய்து வைக்கவும்…..
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, பச்சரிசி மாவு, மைதா மாவு மூன்றையும் சேர்த்து, அதில் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்த சீரகப் பொடி பெருங்காயத்தூள், தட்டிய பூண்டு, ஒரு சிட்டிகை சோடா உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி தோசை மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும்……
தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு சூடானதும், ரொட்டித் துண்டை மாவில் தோய்த்துப் போட்டு, இருபுறமும் வெந்தவுடன் எடுத்து, சாஸ் உடன் பரிமாறவும்………




