சிக்கன் கட்லெட் ஒருமுறை இப்படி செஞ்சு பாருங்க..!!

Oplus_131072

சிக்கன் கட்லெட் செய்வது எப்படி….

சிக்கன்_கட்லெட்

குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மாலை நேரம் உணவு இது, சில நேரங்களில் சிக்கன் சேர்த்து செய்யும் பொழுது சிக்கனின் சுவை தெரியாமல் பிள்ளைகள் சாப்பிடும் போது மாவுப்போல் கட்லட் இருக்கும், ஆனால் இந்த முறையில் செய்து பாருங்கள் சிக்கனின் சுவையுடன் அருமையாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன்-1/2kg
உருளைகிழங்கு-3nos
மஞ்சள் தூள் -2tsp
மசாலா தூள்-2tsp
கரம் மசாலா -1tsp
தயிர் -2tbs
இஞ்சி பூண்டு பேஸ்ட்-2tsp
மல்லி இலை
பிரட் கிரம்ஸ்
முட்டை -1
எண்ணெய்
உப்பு

செய்முறை;

குக்கரில் சிக்கன், உருளைகிழங்கு, மஞ்சள் தூள், மசாலா தூள், தயிர், உப்பு சிறிதளவு தண்ணீர் சேர்த்து இரண்டு விசில் வைத்து வேக விடவும்.

இன்னொரு பேனில் எண்ணெய் உற்றி வெங்காயத்தை வதக்கி கொள்ளவும்.

வெங்காயத்துடன் வேக வைத்து எடுத்த சிக்கன் உருளைகிழங்கை சேர்த்து நன்றாக வதக்கவும் தண்ணீர் விட வேண்டாம். இதனுடன் கரம் மசாலா சேர்த்து கொள்ளவும்.

பிறகு சிக்கனை தனியாக எடுத்து சிறியதாக பிய்த்து வைத்து கொள்ளவும் , உருளைகிழங்கை மசித்துக்கொள்ளவும்.

பிறகு மல்லி இலை சேர்த்து எல்லாத்தையும் ஓன்றாக சேர்த்து பிசைந்து விருப்பமான வடிவில் பிடித்து, முட்டை மற்றும் பிரட் கிரம்பில் பிரட்டி தவாவில் சுட்டு எடுக்கவும்.

டீப் ப்ரை செய்யும் பொழுது உருளை மற்றும் சிக்கனின் சத்துக்கள் குறையும். தவாவில் பிரட்டி எடுத்தால் அதன் சத்துக்கள் நமக்கு கிடைக்கும். பள்ளிவிட்டு மாலை நேரங்களில் பசியுடன் வரும் பிள்ளைகளுக்கு இப்படி செய்து கொடுக்கலாம்.

Read Previous

உடல் எடையை குறைக்கவும் உடலுக்கு பல நன்மைகளை தரும் பூசணி ஜூஸ் செய்வது எப்படி..??

Read Next

ஊட்டச்சத்துக்கள் மிகுந்த முருங்கைக் கீரை சூப் செய்ய வேண்டுமா..?? இந்த பதிவு உங்களுக்குத்தான்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular