சுதந்திர தினத்தை முன்னிட்டு இன்று தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டங்கள்!

 

 

நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளில் இன்று (ஆக.15) சிறப்பு கிராம சபை கூட்டங்கள் நடைபெற உள்ளன.

 

உள்ளாட்சி நிர்வாகத்தை மேம்படுத்துவது, கிராமப்புறங்களில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப் பணிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து ஆலோசிப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட உள்ளன.

 

மேலும், ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்படும் நிதி, பொதுமக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் உள்ளூர் பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் கருத்துகள் கேட்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே, பொதுமக்கள் அனைவரும் சிறப்பு கிராம சபை கூட்டங்களில் தவறாமல் பங்கேற்று, தங்களது பகுதியின் தேவைகள் மற்றும் குறைகளை நேரடியாக தெரிவித்து, வளர்ச்சிப் பணிகளில் தங்களது பங்களிப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Read Previous

இந்தோனேசியாவில் 7.7 ரிக்டர் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கையால் மக்கள் வெளியேற்றம்!

Read Next

சீனாவில் 457 கிலோ ராட்சத பூசணி! வேளாண் கண்காட்சியில் குவிந்த பார்வையாளர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular