தேவையான பொருட்கள்:
எண்ணெய் – 2 டீஸ்பூன்
வெங்காயம் – 2 (பெரியது, நறுக்கியது)
பூண்டு – 6 பல்
காய்ந்த மிளகாய் – 6
தக்காளி – 1 (நறுக்கியது)
புளி – சிறிய துண்டு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் சூடாக்கி வெங்காயம், பூண்டு வதக்கவும்.
2. காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
3. புளி, உப்பு சேர்த்து ஆற விடவும்.
4. மிக்ஸியில் அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து சட்னி தயாரிக்கவும்.




