சென்னையில் வருகிறது ‘ஸ்மார்ட்’ பேருந்து நிழற்குடைகள்!

 

 

சென்னை மாநகராட்சியில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய ‘ஸ்மார்ட்’ பேருந்து நிழற்குடைகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டர் அறிவிப்பை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

 

இந்த நிழற்குடைகளில் இலவச வைஃபை, மொபைல் போன் சார்ஜிங் வசதி உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், அவசர காலங்களில் பொதுமக்கள் உதவி பெறும் வகையில் ‘பேனிக் பட்டன்’ வசதியும் இடம்பெற உள்ளது.

 

பேருந்துக்காக காத்திருக்கும் நேரத்தை பயணிகளுக்கு வசதியாகவும் பாதுகாப்பாகவும் மாற்றும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சென்னையில் பொதுப் போக்குவரத்து பயணிகளுக்கு புதிய அனுபவம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Read Previous

அரசு அலுவலகத்தில் தவெக நிர்வாகி ஆய்வு: பழனியில் சர்ச்சை!

Read Next

“பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லையா?” – வேல்முருகன் கேள்வி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular