நடிகை ஷகீலாவுக்கு கழுத்துப் பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்தியதால் ஏற்பட்ட பாதிப்பே இதற்குக் காரணம் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அறுவை சிகிச்சை முடிந்து தற்போது வீடு திரும்பியுள்ள ஷகீலா, செல்போன் பயன்பாட்டை அனைவரும் முடிந்தவரை குறைத்துக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். குறிப்பாக, குழந்தைகள் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதை பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், செல்போனை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது கழுத்து மற்றும் உடல் நிலை தொடர்பான பிரச்சினைகள் ஏற்படாமல் கவனமாக இருக்க வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஷகீலா கடைசியாக கடந்த ஆண்டு வெளியான ‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.




