ஜார்கண்ட் அரசு தேர்வாணையத்தின் போட்டித் தேர்வுகளில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகளை கண்டித்து ராஞ்சியில் மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம் 21-வது நாளாக தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசியக் கொடியுடன் பேரணி நடத்த மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். தேர்வுகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் உரிய நடவடிக்கை கோரி மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வந்த ஜார்கண்ட் லோக்தந்திரிக் கிராந்திக்காரி மோர்ச்சா தலைவர் தேவேந்திரநாத் மகதோ மற்றும் 4 மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் இருந்த 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். போராட்டம் தொடர்ந்து நீடித்து வருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.




