டெல்லி மெட்ரோ நிலையத்தில் பெண் பயணியை அவருக்குத் தெரியாமல் ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, பணியில் இருந்த சிஐஎஸ்எஃப் வீரர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மெட்ரோ நிலையத்தில் பணியில் இருந்த அந்த வீரர், பெண் பயணியை தனது செல்போனில் ரகசியமாக புகைப்படம் எடுத்ததாக கூறப்படுகிறது. இதைக் கவனித்த சக பயணிகள் அவரிடம் தட்டிக் கேட்டதால், இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் வாக்குவாதம் கைகலப்பாக மாறியதால், மெட்ரோ நடைமேடையில் பயணிகள் கூட்டம் கூடி பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த மெட்ரோ அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிலைமையைக் கட்டுப்படுத்தினர்.
இதையடுத்து, பெண் பயணியிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான சிஐஎஸ்எஃப் வீரரை அதிகாரிகள் இடைநீக்கம் செய்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது.
View this post on Instagram




