தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க ரயில்வே துறை நாடு முழுவதும் தொடர் சோதனைகளை மேற்கொண்டு வருகிறது.
2023ஆம் ஆண்டு முதல் 2026 ஜூன் மாதம் வரை நடத்தப்பட்ட சோதனைகளில், தட்கல் டிக்கெட் முறைகேடுகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 65 ரயில்வே ஊழியர்கள் மற்றும் 13,580 டிக்கெட் இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது.
ரயில்வே சட்டம், 1989-ன் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், சட்டவிரோதமாக டிக்கெட் முன்பதிவு செய்து அதிக விலைக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் சோதனைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்தத் தகவலை ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்துள்ளார்.




