Oplus_131072
தேங்காய் சட்னி செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல் – அரை கப்
பொட்டுக்கடலை – இரண்டு மே கரண்டி
ப.மிளகாய் – 4
பூண்டு – இரண்டு பல் சின்னது
மாங்காய் – ஒரு சிறு துண்டு
தாளிக்க:
கடுகு – 1/4 ஸ்பூன்
உளுந்து – 1/4 ஸ்பூன்
சீரகம்/ கடலைபருப்பு – விரும்பினால் 1/4 ஸ்பூன்
உப்பு – 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
தேங்காய் சட்னி செய்முறை
தேங்காய், ப.மிளகாய், பொட்டுக்கடலை, பூண்டு, மாங்காய் உப்பு சிறுது தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு கருவேப்பிலை தாளித்துப் போட்டு பரிமாறவும்.
சுவையான தேங்காய் சட்னி ரெடி




