Oplus_131072
தேன் பானை எறும்புகள் அல்லது தேன் குட எறும்புகள் என்றழைக்கப்படும் ஒருவகை எறும்புகள் தங்கள் கூட்டத்திற்குத் தேவையான தேனை தங்கள் உடலிலேயே சேமித்து வைக்கும் உயிருள்ள தேன்குடமாகசெயல்படுகின்றன..
தேனீக்கள் தேன் கூட்டில் உணவைச் சேமித்து வைப்பதுபோல், தங்களின் உடலில் தேனை சேமித்து வைக்கின்றன இந்தத் தேன் எறும்புகள்.
கூட்டத்திலிருக்கும் மற்ற எறும்புகளுக்கு உணவு தேவைப்படும்போது தேன் எறும்புகளின் வயிற்றில் துளையிட்டு உணவை உண்கின்றன.
ஒரு கூட்டத்திலிருக்கும் தேன் எறும்பை,மற்றகூட்டத்திலிருக்கும் எறும்புகள் கடத்திச் செல்லவும் முயற்சிகள் நடக்கும்.
அதிக எடை காரணமாக மற்ற எறும்புகள் மாதிரி வேகமாக நடக்கவோ,வெளியில் ஊர்சுற்றவோ,தேன் எறும்புகளால் முடியாது.
புற்றின் ஆழமான பகுதிகளில் பாதுகாப்பாக வசிக்கும் இவற்றை ஆஸ்திரேலியாவில் இருக்கும் குறிப்பிட்ட மக்கள் உணவாக உண்கின்றனர்.




