நடிகை த்ரிஷாவை சுற்றி சமீப காலமாக பல்வேறு அவதூறுகள் மற்றும் சர்ச்சையான கருத்துகள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் த்ரிஷா காட்டமாக ஒரு ஸ்டோரி பதிவிட்டுள்ளார். அதில், “இந்த வயதில் இப்படியெல்லாம் நாடகம் போடுவது வெட்கக்கேடானது. போய் பணம் சம்பாதித்து, நிம்மதியாக வாழுங்கள்” என குறிப்பிட்டுள்ளார். த்ரிஷாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், நடிகை த்ரிஷா விரைவில் துணை முதலமைச்சராக வாய்ப்பிருப்பதாக சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இந்த சூழலில் த்ரிஷாவின் தற்போதைய பதிவு யாரை குறிவைத்து வெளியிடப்பட்டது என்ற விவாதமும் எழுந்துள்ளது.




