“நயினார் நாகேந்திரன் இருக்கும் இடம் தேய்ந்து வருகிறது!” – அமைச்சர் செங்கோட்டையன் விமர்சனம்!

 

 

முதலமைச்சர் விஜய் குறித்து அநாகரீகமாக பேசியதாக கூறப்படும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு அமைச்சர் செங்கோட்டையன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அவர், நயினார் நாகேந்திரன் எங்கிருந்து, எப்படி பேசுகிறார் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை என விமர்சித்தார்.

 

மேலும், அவர் எப்போதும் தற்போதைய அரசுக்கு எதிரான எதிர்மறையான கருத்துகளையே தெரிவித்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் குற்றம்சாட்டினார்.

 

“அவர் இருக்கின்ற இடம் படிப்படியாக தேய்ந்து கொண்டிருக்கிறது” எனக் குறிப்பிட்ட செங்கோட்டையன், நயினார் நாகேந்திரனின் பேச்சுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்தார்.

Read Previous

அப்பாவைப் போலவே போலீஸ் சீருடையில் 4 மாத குழந்தை! வைரலாகும் நெகிழ்ச்சி புகைப்படம்!

Read Next

ஊழல் எதிர்ப்பு இயக்கத்தில் தொடங்கி தேசியக் கட்சியாக உயர்ந்த ஆம் ஆத்மி! ஒரு சுருக்கமான வரலாறு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular