பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் – இய‌ற்கை வைத்தியம்:-

Oplus_131072

பயனுள்ள மருத்துவக் குறிப்புகள் – இய‌ற்கை வைத்தியம்:-

* முடக்கத்தான் இலையை சீரகம் சேர்த்து கஷாயம் வைத்து குடிக்க உடல்வலி நீங்கும்.

* இலந்தைபழம் தொடர்ந்து சாப்பிட்டு வர மார்பு வலி குணமாகும்.

* வசம்பு தூளை, தேங்காய் எண்ணெயில் சிவக்க கொதிக்க வைத்து, வடிகட்டி சிரங்கு மீது தடவி வர சொறி, சிரங்கு குணமாகும்.

* சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சாப்பிட்டால் சுகமான நித்திரை வரும்.

* மலை வாழைப்பழத்தை நல்லெண்ணெயில் சேர்த்து சாப்பிட சீதபேதி குணமாகும்.

* 40 வயதை தாண்டிவிட்டால் அதிக உணவை தவிர்த்து சத்துள்ள உணவு குறைந்த அளவும், அதிக பழச்சாறும் பருகினால் நோய் வராது.

* நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்

* சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.

* கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

* ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.

* மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.

Read Previous

உடலில் தங்கியிருக்கும் கொழுப்பை வெளியேற்ற உதவும் 10 உணவுகள்..!!

Read Next

பொடுகு தொல்லை நீங்க சில இயற்கை வைத்திய குறிப்புகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular