புதன் பெயர்ச்சியால் செப்டம்பரில் பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்! தொழிலிலும் வெற்றி குவியும்!

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராசி மாற்றம் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதில் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வியாபாரத்துக்கு காரணமான கிரகமாக புதன் கருதப்படுகிறார்.

மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக ராசி மாறும் கிரகமாகக் கருதப்படுகிறார்.

புதன் ஆகஸ்ட் 22ஆம் தேதி சிம்ம ராசியில் நுழைந்து, செப்டம்பர் 7ஆம் தேதி தனது சொந்த ராசியான கன்னிக்குள் செல்கிறார். இந்த பெயர்ச்சியின் காரணமாக அனைத்து ராசிகளுக்கும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் என ஜோதிடத்தில் கூறப்படுகிறது.

குறிப்பாக செப்டம்பர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு நிதி நிலை மேம்படுவதுடன், தொழில் மற்றும் பணியிலும் முன்னேற்றம் ஏற்படும் எனக் கூறப்படுகிறது. புதன் பெயர்ச்சியால் சாதகமான பலன்களைப் பெறும் அந்த 3 ராசிகள் குறித்து பார்க்கலாம்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களின் 5ஆம் வீட்டில் புதனின் சஞ்சாரம் நடைபெறுவதால் சாதகமான பலன்கள் கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.

நிதி நிலை முன்னேற்றம் அடைவதுடன், நீண்ட நாட்களாக இருந்த கடன் பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. மனதில் நீண்ட காலமாக இருந்த ஆசைகள் நிறைவேறலாம்.

குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான சூழல் உருவாகலாம். உடல்நிலையும் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சியும், பணியிடத்தில் புதிய பொறுப்புகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாக ஜோதிடக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கன்னி

கன்னி ராசிக்காரர்களின் 2ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் பல்வேறு சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம்.

நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த விஷயங்கள் நிறைவேறுவதுடன், கடின உழைப்புக்கான பலனும் கிடைக்கலாம். உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.

ஆன்மீக பயணங்களுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கலாம். மாணவர்கள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு நல்ல வெற்றியைப் பெறக்கூடும். பொருளாதார ரீதியாகவும் சாதகமான சூழல் உருவாகலாம்.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவுக்கு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.

தனுசு

தனுசு ராசிக்காரர்களின் 11ஆம் வீட்டில் புதன் சஞ்சரிப்பதால் எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம்.

குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக இருந்த சில பிரச்சனைகளும் முடிவுக்கு வர வாய்ப்புள்ளது. நீண்ட தூரப் பயணங்கள் மூலம் நன்மைகள் கிடைக்கலாம்.

பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்பும், நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் கைக்கு வரும் சூழலும் உருவாகலாம்.

காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கலாம். மனநிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டு, நண்பர்களுடன் அதிக நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடும் வாய்ப்பும் கிடைக்கும்.

குறிப்பு: இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஜோதிடத் தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கங்கள், ஆன்மீக நூல்கள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை. இவை நம்பிக்கைகள் சார்ந்த தகவல்கள் மட்டுமே. இதன் அடிப்படையில் எடுக்கப்படும் முடிவுகளுக்கு எங்கள் தளம் பொறுப்பேற்காது.

Read Previous

பெண்களுக்கு இலவசமாக 5 ஆடுகள்! 30,000 பேருக்கு முதல் கட்டத்தில் வழங்க திட்டம்!

Read Next

காதலால் அனுபவித்த கொடுமை.. 2 ஆண்டுகள் வலியில் இருந்தேன்: மனம் திறந்த அனுபமா பரமேஸ்வரன்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular