“பைபிளின்படி செயல்பட்டதால்தான் தவெக ஆட்சி அமைந்தது” – சபாநாயகர் பேச்சு!

 

 

சென்னையில் நடைபெற்ற கிறிஸ்தவ அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், மனிதர்களின் அறிவு, திறமை மற்றும் ஆற்றல் அனைத்தும் கடவுளிடம் இருந்தே கிடைக்கின்றன என தெரிவித்துள்ளார்.

 

மேலும், பைபிளின் போதனைகளுக்கு ஏற்ப செயல்பட்டதால்தான் தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

 

தற்போது தமிழகத்தில் ஊழலற்ற ஆட்சி நடைபெற்று வருவதாக மக்கள் பேசத் தொடங்கியுள்ளதாகவும், அமைதியான தமிழகத்தை உருவாக்கும் முதலமைச்சர் கிடைத்துள்ளதாகவும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

 

சபாநாயகரின் இந்தப் பேச்சு தொடர்பான கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.

Read Previous

வெல்லம் தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!!

Read Next

தவெக நிர்வாகி அரசு அலுவலகத்தில் ஆய்வு: ‘செல்ஃபி’ எடுத்த விவகாரம் சர்ச்சை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular