தாமரை விதைகளில் இருந்து தயாரிக்கப்படும் மக்கானா, குறைந்த அளவில் சாப்பிடும்போது ஆரோக்கியமான சிற்றுண்டியாக கருதப்படுகிறது. ஆனால் சிலருக்கு இது செரிமானப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும்.
குறிப்பாக செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் அல்லது சிறுநீரகப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மக்கானாவை உணவில் சேர்ப்பதற்கு முன்பு கவனமாக இருக்க வேண்டும். இதில் உள்ள நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் காரணமாக சிலருக்கு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ரத்தச் சர்க்கரை குறைவாக இருப்பவர்கள் மற்றும் மக்கானாவுக்கு அலர்ஜி உள்ளவர்கள் அதை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே சிறுநீரக நோய் அல்லது பிற உடல்நலப் பிரச்சினைகள் இருப்பவர்கள், மருத்துவர் அல்லது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனைக்குப் பிறகே மக்கானாவை சாப்பிடுவது பாதுகாப்பானது.




