“மீடியா மைக் என்றால் பயமா?” – முதல்வர் விஜய்யை விமர்சித்த அதிமுக ஐடி விங்!

 

 

“யாரைப் பார்த்தும் பயம் இல்லை” என சினிமா வசனம் பேசும் முதல்வர் விஜய்க்கு, மீடியா மைக் என்றால் மட்டும் பயமா? என அதிமுக ஐடி விங் கடுமையாக விமர்சித்துள்ளது.

 

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகங்களை தொடர்ந்து அனுமதிக்காமல் இருப்பதற்கும், அவர்களை அழைக்காமல் இருப்பதற்கும் காரணம் என்ன? என கேள்வி எழுப்பியுள்ளது.

 

மேலும், அரசு நிகழ்ச்சி என்பது ஒரு கட்சி சார்ந்த நிகழ்ச்சி அல்ல என்ற அடிப்படை புரிதல் கூட ஆட்சியாளர்களுக்கு இல்லையா என்றும் அதிமுக ஐடி விங் விமர்சனம் செய்துள்ளது.

 

முதல்வர் விஜய் தலைமையிலான அரசின் ஊடக அணுகுமுறை குறித்து அதிமுக தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த விமர்சனம் தற்போது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

Read Previous

கூந்தல் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்க வேண்டுமா? இந்த எளிய பழக்கங்களை பின்பற்றுங்கள்!

Read Next

பாதாம் பிசின் சாப்பிடுகிறீர்களா? உடலுக்கு கிடைக்கும் முக்கிய நன்மைகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular