மீண்டும் வெடித்த மவுண்ட் எட்னா! சிசிலியில் விமான சேவை பாதிப்பு!

 

 

இத்தாலியின் சிசிலி தீவில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா மீண்டும் வெடித்து, நெருப்பு குழம்பை வெளியேற்றி வருகிறது.

 

எரிமலையில் இருந்து கொதிக்கும் பாறைகள் மற்றும் கற்கள் உருண்டு விழும் நிலையில், அதிகளவில் சாம்பல் மற்றும் புகையும் வெளியேறி வருகிறது. இதனால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.

 

எரிமலையில் இருந்து எழும் அடர்த்தியான சாம்பல் மேகங்கள் காரணமாக சிசிலி விமான நிலையத்தில் விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விமானப் போக்குவரத்து நடவடிக்கைகளிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் சிசிலிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எரிமலையின் செயல்பாடுகளை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

Read Previous

தமிழக மீனவர்கள் விவகாரத்தில் கடிதம் மட்டும் போதாது: விஜய் அரசுக்கு உதயநிதி வலியுறுத்தல்!

Read Next

சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படத்திற்கு கார்த்தி பாராட்டு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular