முடக்கத்தான் கீரை சூப் செய்முறை விளக்கம்..!!

முடக்கத்தான் கீரை சூப்பு குடிப்பதன் மூலம் முடங்கி கிடக்கும் செல்களும் செயல்படும் என சித்த மருத்துவர்கள் கூறியது உண்டு…

முடக்கத்தான் கீரை மருத்துவ குணம் நிறைந்த கீரையாகும் வாதம் மற்றும் மூட்டு பாதிப்புகளை குறைக்கக்கூடிய தன்மை இந்த கீரைக்கு உள்ளது சரி தற்போது முடக்கத்தான் கீரைகள் சூப் செய்வது எப்படி என்பதை பார்ப்போம், தேவையான பொருட்கள் முடக்கத்தான் கீரை துவரம் பருப்பு, மிளகு, சீரகம் எண்ணெய் கடுகு, மிளகாய் வற்றல், புளி பெருங்காயம் சிறிதளவு பூண்டு தேவையான உப்பு இதனை பயன்படுத்தி முடக்கத்தான் கீரை சூப் செய்யலாம், முடக்கத்தான் கீரை ஆய்ந்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும் துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய் பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும் நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு புலியை கரைத்து கீரையில் விடவும் அரைத்து வைத்த விடுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும் பின்பு இதனை இறக்கி வைத்து விட்டு கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்து சேர்க்கவும் இந்த சூப்பை சூடாக சாப்பிட சுவையாக இருக்கும், மேலும் முடக்கத்தான் கீரை சூப் சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் வலுப்பெற்று ஆரோக்கியமாகவும் வலிமை மிக்கதாகவும் செயல்படும், மேலும் வாரத்திற்கு ஒரு முறை முடக்கத்தான் கீரை சூப் குடித்துருவதன் மூலம் உடல் ஆரோக்கியம் அடையும்…!!

Read Previous

ஆண்களின் மலட்டுத்தன்மை நீங்க இதை மட்டும் பண்ணுங்க போதும்..!!

Read Next

நெஞ்சு சளியை அடியோடு விரட்டும் சித்தரத்தை பால்..!! செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular