சென்னையில் நடுரோட்டில் பள்ளி மாணவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி, திமுக அயலக அணி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், “முதலமைச்சர் விஜய் தூங்குகிறாரா?” என கேள்வி எழுப்பியுள்ளதுடன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை குறித்தும் விமர்சனம் முன்வைத்துள்ளது.
மேலும், கஞ்சா வியாபாரிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு அரசு இடம் அளித்துள்ளதாக குற்றம்சாட்டிய திமுக அயலக அணி, “Sofa Model அரசு” என தமிழக அரசை விமர்சித்துள்ளது.
மக்களின் உயிரைப் பற்றி கவலைப்படாமல், முந்தைய ஆட்சியின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதிலேயே முதலமைச்சர் விஜயின் கவனம் இருப்பதாகவும் அந்த அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.




