தவெக அமைச்சர்கள் யாரும் லஞ்சம் வாங்க மாட்டோம் என்றும், தவறு செய்தால் முதலமைச்சர் விஜய் உடனடியாக பதவியை பறித்துவிடுவார் என்றும் அமைச்சர் என்.ஆனந்த் தெரிவித்துள்ளார்.
கட்சி நிகழ்ச்சியில் பேசிய அவர், “ஊழல் செய்தால் தலைவர் என்ன நடவடிக்கை எடுப்பார் என்பது எங்களுக்குத் தெரியும்” என்றார்.
மேலும், அரசியலில் பதவி நிரந்தரமானது அல்ல என்பதை சுட்டிக்காட்டிய அவர், “மேடையில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் கீழே வரலாம்; கீழே இருப்பவர்கள் மேலே வரலாம்” என வெளிப்படையாக தெரிவித்தார்.




