முதலமைச்சர் விஜய் குறித்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேசியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது அவர் தனது கருத்துக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘ஒரே நாடு 2.0’ பத்திரிக்கை வெளியீட்டு விழாவில் மேடையில் பேசிய தனது உரை திரித்து சித்தரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தனது பேச்சை திரித்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பவர்களுக்கு ஒன்றைத் தெரிவிப்பதாக கூறிய நயினார் நாகேந்திரன், எந்தவித உள்நோக்கத்துடனும் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், தாய் மீதும், தாய் நாடு மற்றும் தாய்மொழி மீதும் மிகுந்த அக்கறை கொண்டவன் தான் என்றும் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.




