வேம்பின்மகத்துவங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Oplus_131072

வேம்பின்மகத்துவங்கள் !!

தற்போதுவேப்பம்பூசீசன்.ஆங்காங்கே வேப்பம் பூ பூத்து குலுங்குகிறது.இவற்றை சேகரித்து தன்கு சுத்தம் செய்து ,வெயிலில் காயவைத்து ஒரு டப்பாவில் வைத்துகொண்டால் ஒரு வருடம்வரை உபயோகப்படுத்திகொள்ளலாம். வேப்பம்பூவை பல வகைகளில் உணவில் பயன்படுத்திகொள்ளலாம்
வேப்பம்பூ பச்சடி ( உடனடியாக பறித்தது)
வேப்பபம்பூ ரசம்
வேப்பம்பூ புளிகுழம்பு
வேப்பம்பூ வடாகம்
வேப்பம்பூ கார குழம்பு
ஒரு கரண்டியில் சிறிது நெய் ஊற்றி அடுப்பில்வைத்து காய்ச்சி அதில் சிறிது உலர்ந்த வேப்பம்பூவை போட்டு லேசாக சூடு செய்து சுடுசாதத்தில் கலந்து உப்பு சேர்த்து சாப்பிட்டு பாருங்கள்,அ்அவ்வளவு ருசியாக இருக்கும்.

வேப்பம்பூ ரசம்
சாதாரணமாக எப்போதும் ரசம் செய்வதுபோல் செய்து கொதித்து இறக்கும்தருவாயில் ,சிறிது நெய்யில் வேப்பம்பூவை சேர்த்து வதக்கி கொதிக்கும் ரசத்தில்கொட்டி சிறிது நாட்டு வெல்லம் சேர்த்து இறக்கி பரிமாறவும்
பலன்கள்
நோய் எதிர்ப்பு சக்த்திகூடும்
வாய்வுதொல்லை அகலும்
வயிறு உப்புசம் விலகும்
வயிற்று பிரச்சனைகள் தீரும்
இடுப்புவலி , மூட்டுவலிகள் நீங்கும்
வயிற்றில் உள்ள பூச்சிகள் , புழுக்கள் மலத்துடன் வெளியேறும்.

 

Read Previous

இரவு முழுவதும் ஏசியைப் பயன்படுத்தும் போது தவிர்க்க வேண்டிய 5 முக்கியமான விஷயங்கள்..!!

Read Next

வீட்ல சமைக்கும் போது பன்னீர் பட்டர் மசாலா ஹோட்டல் ஸ்டைல் டேஸ்ட் வரலனா..!! இந்த டிப்ஸ் பாலோ பண்ணி பாருங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular