என்ரிகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளான VSOP Exshaw Gold Brandy, Louis Vernant, Honey Bee, Veeran உள்ளிட்ட 11 மதுபான பிராண்டுகளின் விற்பனைக்கு டாஸ்மாக் நிர்வாகம் விதித்திருந்த தடை ஒரே நாளில் நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த மதுபானங்களில் அனுமதிக்கப்படாத செயற்கை சுவையூட்டிகள் இருப்பதாக FSSAI நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்தத் தடையை டாஸ்மாக் நிர்வாகம் தற்போது நீக்கியுள்ளது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மதுபான பிராண்டுகளை மீண்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, நாளை முதல் டாஸ்மாக் கடைகளில் இந்த 11 பிராண்டுகளின் மதுபாட்டில்கள் மீண்டும் விற்பனைக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.




