ரியல்மி நிறுவனம் வருகிற 6ஆம் தேதி இந்திய சந்தையில் ரியல்மி 16 ப்ரோ சீரிசை வெளியிட உள்ளது. புதிய சீரிசில் இரண்டு மாடல்கள் இருக்கும், அதாவது ரியல்மி 16 ப்ரோ 5ஜி, ரியல்மி 16 ப்ரோ பிளஸ் 5ஜி. இவை ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கும். இதன் விலை ரூ.31,999 முதல் ரூ.36,999 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அம்சங்களை பொருத்தவரை ரியல்மி 16 ப்ரோ சீரிஸ் மாடல்களில் 7,000mAh பேட்டரி மற்றும் 200MP பிரைமரி கேமரா பொருத்தப்பட்டிருக்கும்.




