முதியோர் இல்லத்தில் தங்கியிருந்த 92 வயது மூதாட்டி ஒருவர், அங்கிருந்து வெளியேறுவதற்காக 2.15 மீட்டர் உயரமுள்ள இரும்பு வேலியை ஏறித் தாண்டிய காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
வெறும் 24 வினாடிகளில் வேலியின் உச்சியை அடைந்த அவர், மறுபுறம் அசால்ட்டாக குதித்து வெளியேறிய காட்சி அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதுகுறித்து பேசிய முதியோர் இல்ல இயக்குநர், அந்த மூதாட்டி தீவிர நினைவாற்றல் இழப்பு நோயால் பாதிக்கப்பட்டவர் என்றும், இளமைக் காலத்தில் உடற்பயிற்சி மற்றும் ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தவர் என்றும் தெரிவித்தார்.
வேலியைத் தாண்டி வெளியேறிய மூதாட்டியை அதிகாரிகள் 25 நிமிடங்களுக்குள் இல்லத்தின் அருகே பத்திரமாக மீட்டு, மீண்டும் முதியோர் இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.
🇨🇳😱Une Femme de 92 ans a été filmée par une caméra de surveillance en train d’escalader une GRILLE DE 2,15 MÈTRES pour quitter sa maison de retraite.
En seulement 24 SECONDES, elle s’est hissée jusqu’au sommet, puis a atterri de l’autre côté. Le directeur de l’établissement a… pic.twitter.com/zRb6hDOplw
— Cultination (@Cultination1) August 17, 2026




